வெயிலைத் தணிக்கும் முயற்சி.. வகுப்பறைச் சுவர்களில் மாட்டுச் சாணத்தை பூசிய டெல்லி கல்லூரி முதல்வர்
டெல்லி: டெல்லி பல்கலைக்கழக கல்லூரியின் முதல்வர் பிரத்யுஷ் வத்சலா வகுப்பறைகளை குளிர்விப்பதற்காக எடுத்த ஒரு முடிவு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. வெயிலைத் தணிக்கும் முயற்சியாக வகுப்பறைச் சுவர்களில் மாட்டுச் சாணத்தை பூசியிருக்கிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. வகுப்பறையில் சரியான மின்விசிறிகள் அல்லது ஏசி இல்லை என்றும் அதுவே தங்களுக்கு தேவை என்றும் மாணவர்கள் பதில் அளித்து வருகிறார்கள்.
கோடைக்காலத்தில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் வெப்பத்தில் தகிக்கும். மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் இமயமலையில் மட்டும் வெயில் குறைவாக இருக்கும்.. மற்ற எந்த பகுதிகளிலும் பாகுபாடுகளே இல்லாத அளவிற்கு வெயில் அதிகமாக இருக்கும். எங்கெல்லாம் அடர்ந்த மரங்கள் இருக்கிறதோ, எங்கெல்லாம் அடர்ந்த காடுகள் உள்ளதோ அங்கெல்லாம் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும். மற்ற பகுதிகளில் மண்டையை பிளக்கும் அளவிற்கு வெயில் இருக்கும். சென்னை, டெல்லி, ஹைதராபாத்தில் எல்லாம் அரைமணி நேரம் வெயிலில் நடந்தாலே உடல் வெப்பம் கடுமையாக அதிகரிக்கும். காற்று கூட வர முடியாத அளவிற்கு வீடுகள் உள்ள நகரங்கள் எல்லாமே வெயில் காலத்தில் கடும் வெப்பத்தை சந்தித்தே ஆக வேண்டியுள்ளது.

இந்நிலையில் டெல்லி பல்லைக்கழக லட்சுமிபாய் கல்லூரியில் வெப்பத்தை தணிக்கும் முயற்சியாக சுவர்கள் எல்லாம் சாணத்தால் பூசப்பட்டுள்ளது. டெல்லி பல்கலைக்கழக கல்லூரியின் முதல்வர் பிரத்யுஷ் வத்சலா இப்படி செய்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரியின் மிக பழமையான கட்டிடங்களில் ஒன்றான பிளாக் C-யில் ஏற்படும் வெப்பத்தை தடுக்கும் வகையில் கல்லூரி முதல்வர் லட்சுமிபாய், வகுப்பறையின் சுவர்களில் மாட்டு சாணத்தை தனிப்பட்ட முறையில் தடவினார். இது உட்புற வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் என்று நம்பப்படும் பாரம்பரிய இந்திய நடைமுறைகளில் ஒன்றாகும். நம்மூர்களில் அந்த காலங்களில் சாணி பூசி வீடுகளை மொழுகுவர்கள். வீடுகள் குளிர்ச்சியாக இருக்கவும், தூய்மையாக இருக்கவும் இப்படி செய்வது வழக்கம். அதேபோல் டெல்லி கல்லூரியில் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கல்லூரியின் வாட்ஸ் அப் குழுவில் கல்லூரியின் முதல்வர் பிரத்யுஷ் வத்சலா பகிர்ந்து கொண்ட வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
பழங்கால முறையான சாணம் பூசும் முறை, சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையாக பலர் நம்புகிறார்கள். அதைத்தான் கல்லூரி முதல்வர் பிரத்யுஷ் வத்சலா இப்படி செய்திருப்பதாக அவரை ஒரு தரப்பினர் பாராட்டி வருகிறார்கள்.
பிரத்யுஷ் வத்சலா மற்ற ஊழியர்களுடன் இணைந்து சாணம் பூசுவது குறித்து ஆசிரியர்கள் கூறும போது, வகுப்பறைகளை கற்பிப்பதற்கு மிகவும் வசதியாக மாற்றுவதற்கான ஒரு முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும், குறிப்பாக வளாகத்தின் பழமையான கட்டமைப்புகளில் ஒன்றான, கேண்டீனுக்கு மேலே அமைந்துள்ள பிளாக் சி கட்டிடம் கோடையில் வெப்பத்தால் தகிக்கும்.. எனவே தான் சாணி பூசப்பட்டது என்று கூறினார்கள்.
மறுபுறம் கல்லூரி முதல்வர் பிரத்யுஷ் வத்சலாவின் செயலுக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. நீண்டகாலமாக கல்லூரியின் உள்கட்டமைப்பு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்றும், பல வகுப்பறைகள் நெரிசல் மிகுந்த கட்டிடமாக உள்ளதாகவும், காற்றோட்டம் இல்லை என்றும் சரியாக ஓடாத மின் விசிறிகள் தான் கல்லூரிகளின் வகுப்பறைகள் உள்ளதாகவும், ஏசி அல்லது ஏர் கண்டிஷனர்கள் இல்லை என்றும் கழிப்பறைகள் கூட மோசமாக பராமரிக்கப்படுகிறது என்றும் மாணவர்கள் விமர்சிக்கிறார்கள்.
இது தொடர்பாக கல்லூரி முதல்வர் பிரத்யுஷ் வத்சலா விளக்கம் அளித்த போது, "இது ஆசிரியர்களின் ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு பகுதி" என்று மட்டும் கூறி முடித்துக் கொண்டார். கல்லூரி முதல்வர் பிரத்யுஷ் வத்சலாவின் இந்த செயல் பல வருடங்களாக கிராமங்களில் இருக்கிறது.
கிராமப்புறங்களில், பசுவின் சாணம் மற்றும் சேற்றின் கலவை பொதுவாக தரைகள் மற்றும் சுவர்களை பூசப் பயன்படுகிறது, இது குளிர்விப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூச்சி விரட்டும் பண்புகளை வழங்குவதோடு வெப்பநிலையை சீராக்க உதவும் எனறு பலர் நம்புகிறார்கள்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூட முன்பு பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு வண்ணப்பூச்சை அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நிபுணர்களின் கூற்றுப்படி, பழைய கட்டிடங்கள், மோசமான காற்றோட்டம் கொண்ட அறைகள் மற்றும் பெரிய அறைகளைக் கொண்ட லட்சுமிபாய் கல்லூரியில், மின்விசிறிகள் அல்லது ஏசிக்களுக்கு பதில் மாட்டு சாண பூச்சை வைத்து மாற்ற முடியாது என்கிறார்கள்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications