டெல்லி பல்கலைக்கழக தேர்தல் முடிவு.. அமித்ஷாவையே அசரடித்த ஏபிவிபி.. எத்தனை இடம் தெரியுமா?
டெல்லி: டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன-இதில் மொத்தமுள்ள 4 இடங்களில் பாஜகவின் ஏபிவிபி அமைப்பு மூன்று இடங்களை வென்றுள்ளது.
இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய நலனை முதன்மைப்படுத்தும் சித்தாந்தத்தின் மீதான நம்பிக்கையை இந்த வெற்றி பிரதிபலிக்கிறது என்றார்.

டெல்லி பல்கலைக்கழகம் இந்தியாவின் மிக முக்கியமான பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்று ஆகும். இந்த பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளில் பல ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். இங்கு நடைபெறும் மாணவர் சங்க தேர்தல் மிகவும் பிரபலம் ஆகும்.
தேசிய கட்சிகள் கூட இந்த தேர்தலில் தங்கள் அமைப்பினரை களத்தில் இறக்கும். அந்த வகையில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் ஆகிய நான்கு பதவிகளுக்கு மொத்தம் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதன்படி, டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் நான்கு மத்திய குழு பதவிகளில் மூன்றில் பாஜகவின் ஏபிவிபி அமைப்பு ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்தது. டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் பதவியிலும் ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்தது. துணைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் NSUI முன்னணியில் இருந்து வந்தது. இதேபோல் செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் பதவிக்கு ஏபிவிபி கணிசமான வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தது.
இந்நிலையில் இறுதியாக டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் நான்கு மத்திய குழு பதவிகளில் மூன்றில் பாஜகவின் ஏபிவிபி அமைப்பு வெற்றி பெற்றது. இதன் மூலம் தலைவர் பதவியை பாஜகவின் ஏபிவிபி அமைப்பு கைப்பற்றி உள்ளது. அதேநேரம் துணை தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சியின் NSUI அமைப்பு கைப்பற்றி உள்ளது.
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) துஷார் தேதா, காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான NSUI இன் ஹிதேஷ் குலியாவை தோற்கடித்து டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் பதவியை வென்றார். காங்கிரஸ் மாணவர் பிரிவின் அபி தஹியா டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் பதவியை கைப்பற்றினார். செயலாளர் பதவியில் ஏபிவிபி அமைப்பின் அப்ரஜிதாவும், இணை செயலாளர் பதவியில் ஏபிவிபி அமைப்பின் சச்சின் பைஸ்லாவும் வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் ஏபிவிபி அமோகமாக வெற்றி பெற்றதற்காக அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றி தேசிய நலனை முதன்மைப்படுத்தும் சித்தாந்தத்தின் மீது இளம் தலைமுறையினரின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. சுவாமி விவேகானந்தரின் இலட்சியங்களையும் தேசிய உணர்வையும் இளைஞர்கள் மத்தியில் உயிர்ப்புடன் வைத்திருக்க ஏபிவிபி மாணவர்கள் உறுதியுடன் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்று முழு நம்பிக்கை இருக்கிறது" என்று அமித்ஷா கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications