"வாந்தி வருது.." பேருந்தில் இருந்து தலையை வெளியே நீட்டிய பெண்.. மற்றொரு வாகனம் மோதி தலை துண்டானது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் மிகவும் அதிர்ச்சிகரமான விபத்து ஒன்று நடந்துள்ளது. இதில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நமது பாதுகாப்பான பயணங்களை உறுதி செய்யவே போக்குவரத்து விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடித்தால் விபத்துகள் பெருமளவு குறைந்துவிடும்.

 Delhi woman Crushed By Vehicle when sticks Head Out Of Bus To Vomit

இருப்பினும், இங்கே பலரும் போக்குவரத்து விதிகளை மதிப்பதே இல்லை.. அல்லது முறையாகப் பின்பற்றுவது இல்லை. இதனால் சாலை விபத்துகளும் அது சார்ந்து ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

செய்யக் கூடாது: பேருந்துகளில் கரம், சிரம், புறம் நீட்டாதீர்கள் என்று எழுதி வைத்திருப்பார்கள். எதிர்புறமோ அல்லது முந்தி செல்லும் வாகனங்களோ மிகவும் நெருக்கமாக வர வாய்ப்புகள் அதிகம்.. இதனால் விபத்து ஏற்படும் என்பதால் இதுபோல எழுதி வைத்திருப்பார்கள். இதை நாம் முறையாகப் பாலோ செய்ய வேண்டும்.. இல்லையென்றால் ரொம்பவே மோசமான விபத்து தான் ஏற்படும்.. அப்படியொரு ஷாக் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் 20 வயது பெண் ஒருவர் பேருந்து ஜன்னல் வழியாக வாந்தி எடுக்க முயன்றுள்ளார். இதற்காக அவர் தனது தலையை வெளியே நீட்டியுள்ளார். அப்போது இரு வாகனங்களுக்கு இடையே அவரது தலை சிக்கிய நிலையில், அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்தச் சம்பவம், ஹரியானா ரோட்வேஸ் மாநில அரசுக்குச் சொந்தமான பேருந்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

மோசமான விபத்து: உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பாப்லி.. இவர் அங்கே காஷ்மீர் கேட்டில் இருந்து லூதியானா செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது திடீரென அவருக்கு வாந்தி வரும் உணர்வு ஏற்பட்டுள்ளது. ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த அவர் வாந்தி எடுக்க ஜன்னல் வழியாகத் தலையை வெளியே நீட்டியுள்ளார். அப்போது தான் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது.

அதாவது சரியாக இந்த நேரம் பார்த்து பின்னால் இருந்த வாகனம், இந்த பேருந்தை ஓவர்டேக் சென்று செல்ல முயன்றுள்ளது. சாலை குறுகலாக இருந்த நிலையில், இந்த பேருந்தை ஒட்டியபடியே அந்த வாகனம் சென்றுள்ளது. சரியாக அப்போது இவரும் தலையை வெளியே நீட்டி வாந்தி எடுக்க முயலவே, அந்த இளம்பெண்ணின் தலை பின்னால் வந்த வாகனத்தில் மீது கொடூரமாக மோதியது. இதில் இரண்டு வாகனங்களுக்கும் இடையே இவரது உடல் நசுங்கி அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொடூரம் நடந்த போது அவரது குடும்பத்தினரும் உடன் தான் பயணித்துள்ளார். அந்தப் பெண் அவரது சகோதரி, சகோதரி கணவர் மற்றும் அவர்களின் 3 குழந்தைகளுடன் பேருந்தில் பயணித்துள்ளார். அவர்களின் கண் முன்னால் தான் இந்த ஷாக் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இது குறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இளம்பெண் மீது மோதிய வாகனம் நிற்காமல் அங்கிருந்து சென்ற நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

வாந்தி வருவது ஏன்: பேருந்துகளில் பயணிக்கும் போது ஒரு சிலருக்கு வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுவது வழக்கம். மூளை பொதுவாக உடல் இயக்கம் குறித்து உடல் உறுப்புகளில் இருந்து தான் சிக்னல் பெறும். வாகனத்தில் பயணிக்கும் போது கண்கள், காதுகள், மூட்டுகள் ஆகியவை மாறுபட்ட சிக்னல்களை வழங்கும் போது மூளையால் நாம் ஒரே இடத்தில் இருக்கிறோமா.. அல்லது நகர்ந்து கொண்டு இருக்கிறோமா எனத் தெரியாமல் குழம்பும்..

அதுபோன்ற சம்பவங்களில் இதுபோல நடக்கும்.. இதைத் தடுக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். அல்லது கேரி பேகை எடுத்துச் சென்று அதில் வாந்தி எடுக்கலாம். ஓடும் பேருந்தில் இதுபோல கண்டிப்பாகச் செய்யக் கூடாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+