தாம்பத்தியத்தில் திருப்திப்படுத்தாத கணவர்.. மனைவி கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சி
டெல்லி: டெல்லியில் தாம்பத்திய உறவில் தன்னை திருப்திப்படுத்தவில்லை என கணவரிடம் அடிக்கடி இளம்பெண் ஒருவர் சண்டையிட்டு வந்துள்ளார். இந்த சண்டை முற்றவே கோபமாகி அந்த இளம்பெண் செய்த செயல் அவரது கணவரின் உயிரையே பறித்துள்ளது. மேலும் கொலையை மறைக்க அந்த இளம்பெண் நாடகமாடிய நிலையில் இப்போது போலீசாரிடம் சிக்கி உள்ளார். அப்படி என்ன நடந்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
டெல்லியை சேர்ந்தவர் முகமது ஷாகித் என்ற இர்பான் (வயது 32). இவரது மனைவி பெயர் பர்ஹானா கான் (29). இவர் 2 பேரும் திருமணமான புதிதில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அதன்பிறகு அவ்வப்போது கணவன் - மனைவி இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் தான் 20ம் தேதி பர்ஹானா கான், தனது கணவர் இர்பானை டெல்லி நிஹால் விஹார் பகுதியில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதித்தார். இர்பானில் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்தன.
இதுபற்றி டாக்டர்கள் கேட்டபோது இர்பான், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். ஏராளமான பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தார். கடன் அதிகரித்தது. குடும்பம் வறுமையை நோக்கி சென்றது. இதனால் இர்பான் மனம் உடைந்து காணப்பட்டார். மனஅழுத்தத்துக்கு உள்ளானார். இதனால் அவர் கத்தியை எடுத்து குத்திகொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து டாக்டர்கள் இர்பானுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்திருந்தது தெரியவந்தது. அதுமட்டுமின்றி உடலில் இருந்த கத்திக்குத்து காயங்களை பார்த்தனர். அந்த காயங்கள் மிகவும் ஆழமாக இருந்தது. குறிப்பாக இதயத்தில் கத்திக்குத்து விழுந்து இருந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. தற்கொலைக்கு முயலும் நபரால் இப்படி ஆழமாக கத்தியை எடுத்து குத்திகொள்ள முடியாது என்று டாக்டர்கள் நினைத்தனர்.
இதனால் இர்பான் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று டாக்டர்கள் நினைத்தனர். இதையடுத்து மருத்துவமனை சார்பில் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து இர்பான் மனைவி பர்ஹானா கானிடம் விசாரித்தனர். அப்போது டாக்டர்களிடம் கூறிய அதே கதையை அவர் போலீசாரிடமும் கூறினார். ஆனால் போலீசார் நம்பவில்லை. பர்ஹானா கானை பிடித்து தீவிரமாக விசாரித்தனர். மேலும் அவரது செல்போனை வாங்கி சோதித்தனர். அப்போது தான் உண்மை வெளிவந்தது.
அதாவது போலீசார் பர்ஹானா கானின் செல்போனில் கூகுள் ஹிஸ்டரியை பார்த்தனர். அப்போது அவர் வாட்ஸ்அப் உரையாடலை எப்படி டெலிட் செய்வது பற்றியும் தேடியிருந்தது தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது. பர்ஹானாவிடம் துருவி துருவி போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையின்போது தனது கணவர் இர்பானை கொலை செய்ததாக பர்ஹானா கான் ஒப்புக்கொண்டார்.
மேலும் கொலைக்கான காரணம் பற்றி அவர் கூறிய தகவல் அனைவரையும் திடுக்கிட வைத்தது. அதாவது இர்பான் தாம்பத்திய உறவில் திருப்திபடுத்தவில்லையாம். இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இதனால் கணவர் இர்பானை கொலை செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று பர்ஹானா கான் கத்தியை எடுத்து இர்பானை குத்தி கொன்றுள்ளனர். அதன்பிறகு கொலையை மறைக்க திட்டமிட்டு இர்பான் உடலை மருத்துவமனைக்கு தூக்கி வந்து அவர் தற்கொலை முயற்சி செய்ததாக கூறி திட்டமிட்டடது தெரியவந்தது. பர்ஹானா கானை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications