பிரீத்தி தலையை துளைத்து கொண்டு போன தோட்டா.. டெல்லியை அதிர வைத்த கொலை + தற்கொலை!
டெல்லி மெட்ரோ ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டர் சுட்டு கொல்லப்பட்டார்
டெல்லி: பிரீத்தியின் தலையை துளைத்து கொண்டு போனது துப்பாக்கி குண்டு.. நள்ளிரவில் பெண் இன்ஸ்பெக்டர் பிரீத்தியை சக காவலரே சுட்டுக் கொன்றும், தற்கொலை செய்து கொண்டதும் ஒட்டுமொத்த தலைநகரையே திணறவைத்துள்ளது!
கிழக்கு டெல்லி பத்துர் கஞ்ச் தொழிற்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் பெண் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பிரீத்தி அக்லாவாத். 29 வயதாகிறது.
ரோகினி பகுதியில் தங்கி உள்ளார்.. நேற்றிரவு பெண் போலீஸ் டியூட்டி முடிந்து வீட்டுக்கு செல்ல மெட்ரோ ரெயில்வே ஸ்டேஷனில் நடந்து வந்துகொண்டிருந்தார்.

பாதுகாப்பு
அப்போது திடீரென ஒரு மர்மநபர், அவரை துப்பாக்கியால் சுட்டார்.. இதில் பிரீத்தி நிலைகுலைந்து அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். டெல்லியில் இன்று தேர்தல் நடைபெற இருந்த நிலையில் உச்சக்கட்ட பாதுகாப்பையும் மீறி இந்த கொலை நடந்தது தலைநகரையே அதிர வைத்தது.. தகவலறிந்து உடனடியாக போலீசார் விரைந்தனர்.

தோட்டாக்கள்
பிரீத்தியின் உடல் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. மேலும் அங்கிருந்த 3 துப்பாக்கி குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவையும் ஆய்வு செய்தபோது, பிரீத்தியை சக இன்ஸ்பெக்டர் ஒருவரே சுட்டு கொன்றதை பார்த்து போலீசாரே அதிர்ந்துவிட்டனர்.. அவரது பெயர் தீபன்ஷீ ரதி.. ஹரியானாவை சேர்ந்தவர்.. சோனிபட் ஸ்டேஷனில் அவரும் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கிறார்.

தற்கொலை
ஆனால் பிரீத்தியை சுட்டுக்கொன்ற உடனேயே அந்த சப்-இன்ஸ்பெக்டரும் வீட்டுக்கு போய் தற்கொலை செய்து கொண்டார்.. வேலை பார்ப்பது வேற, வேற ஸ்டேஷன் என்றாலும் இருவரும் ஒரே பகுதியில் வசித்து வந்துள்ளனர்... 2018-ம் ஆண்டு பேட்ச் மெட்டுகளாக இருந்துள்ளனர்.. அப்போதுதான் பிரீத்தி மீது தீபன்ஷீக்கு காதல் வந்துள்ளது.. கல்யாணம் செய்து கொள்ளுமாறு பிரீத்தியிடம் கேட்க, அதற்கு அவர் மறுத்துள்ளதாக தெரிகிறது.

ஒருதலை காதல்
பிரீத்திக்கு அவரை பிடிக்கவில்லை.. ஒருதலை காதலால் தவித்த தீபன்ஷீக், அவரையும் கொன்று, தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார். டெல்லியின் மொத்த போலீசாரும் பாதுகாப்பில் உள்ள நிலையில், பல இடங்களில் பேரிகாட்டுகளை போட்டு சோதனை செய்து வந்த நிலையில்.. 2 போலீஸ்காரர்கள் உயிரிழந்தது பரபரப்பையும், அதிர்ச்சியையும் தந்துள்ளது.
-
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications