இந்தியாவை தாக்கினால் நாங்கள் அடிப்போம்.. மோடி பிரதமராக இருக்கும் வரை அமெரிக்கா உதவும்.. டிரம்ப்
பாரீஸ்: ''பிரதமராக நரேந்திர மோடி பதவியில் இருக்கும் வரை இந்தியா மீது யாராவது தாக்குதல் நடத்தினால் நாங்கள் இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்குவோம்'' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிற நாடுகளுக்கு வார்னிங் செய்துள்ளார். பிரான்சின் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உடனான சந்திப்பின்போது டொனால்ட் டிரம்ப் இதனை தெரிவித்தார்.

ஜி7 அமைப்பில் பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பில் நம் நாடு உறுப்பினராக இல்லை. இந்நிலையில் தான் ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு பிரான்ஸ் தலைமையேற்றது.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைமையேற்றார். பிரான்ஸ் நகரில் நேற்று தொடங்கிய ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். நம் நாடு உறுப்பு நாடாக இல்லாவிட்டாலும் கூட பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பிரான்சின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் (Evian-les-Bains) நகரில் இன்று ஜி7 மாநாட்டின் 2வது நாள் அமர்வு நடந்தது. இன்று பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது இருதலைவர்களும் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்தனர். இந்த சந்திப்பின்போது பிரதமராக நரேந்திர மோடி இருக்கும் வரை இந்தியாவை யாராவது தாக்கினால் அவர்களை எதிர்த்தும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் நாங்கள் வருவோம் என்று உறுதியாக கூறினார்.
இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் கூறியதாவது: '' பிரதமர் நரேந்திர மோடி பதவியில் இருக்கும் வரை இந்தியா மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக களம் இறங்கும். அதேவேளையில் இந்தியாவின் புதிய தலைவராக யாரும் வந்தால் நாங்கள் அப்படி செய்வோமா என்பது எனக்கு உறுதியாக தெரியாது'' என்றார். டிரம்ப் இப்படி சொன்னது அனைவருக்கும் சிரிப்பை ஏற்படுத்தியது. டிரம்ப், மோடியும் சிரித்தனர்.
மேலும் டிரம்ப் தொடர்ந்து பேசுகையில், ''ஏனென்றால் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே சிறந்த உறவு உள்ளது. பிற நாடுகளுடனான உறவு எங்களை விட நெருக்கமாக இருக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் நானும் அவரும், எங்களின் இருநாடுகளும் நல்ல நட்பில் உள்ளது. இது உண்மையில் எங்களின் இருவரிடம் இருந்து துவங்குகிறது'' என்றார்.
அதேபோல், ''மோடி வர்த்தக பேச்சுவார்த்தையில் கடினமான நபராக இருக்கிறார். அவரது தலைமை பண்பு மற்றும் பேச்சுவார்த்தை நடத்தும் திறமை பாராட்டுக்குரியதாக உள்ளது. பிரதமர் மோடியின் கீழ் இந்தியா தொடர்ந்து செழித்து வளரும். அவர் தலைவராக இருக்கும் வரை இந்தியா மிகச்சிறப்பாக செயல்படும்'' என்று கூறினார்.
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
வாட்சை தொலைத்த மேக்ரான்! டிரம்புக்கு கிடைத்த டுகாட்டி பைக்! G7 மாநாட்டில் நடந்த சுவாரசிய சம்பவங்கள் -
இந்தியா மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தெற்கு ஆசியாவுக்கும் குரல் கொடுத்த மோடி! ஜி7 மாநாட்டில் மாஸ் பேச்சு! -
PM Modi: துரந்தர் பிஜிஎம் போட்டு மோடியை வரவேற்ற பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்! பரவும் வீடியோ! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications