1992-ல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டத்துக்கு எதிரானது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Recommended Video
டெல்லி: 1992-ம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது. இதில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து கூறப்பட்டுள்ளதாவது:

அயோத்தியில் மசூதி இருந்த இடத்துக்கு முன்னர் கோவில் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை ராம் லல்லா அமைப்பினரால் நிரூபிக்க முடியவில்லை. முஸ்லிம்கள் மசூதி இருந்த இடத்தை கைவிடவில்லை.
இந்துக்கள் வெளிமுற்றத்தில் வழிபாடு நடத்தி உள்ளனர். பாபர் மசூதியானது காலி நிலத்தில் கட்டப்படவில்லை என்கிற தொல்லியல்துறை வாதம் ஏற்கப்படுகிறது. இந்துக்களும் முஸ்லிம்களும் 12-ம் நூற்றாண்டில் இருந்து 16-ம் நூற்றாண்டுவரை என்ன மாதிரியான சர்ச்சைக்குரிய இடம் இருந்தது என்பதை விளக்கவில்லை.
1934, 1949-ம் ஆண்டுகளில் பாபர் மசூதி சேதப்பட்டது சட்டத்துக்கு எதிரானது. 1949-ல் இந்துக்கள் சிலைகளை உள்ளே வைத்தது சட்டத்துக்கு முரணானது. 1992-ல் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதியை இடித்ததும் சட்டத்துக்கு எதிரானது.
1857-ம் ஆண்டுக்கு முன்னர் சர்ச்சைக்குரிய நிலம் தங்கள் வசம் இருந்தது என்பதை சன்னி வக்பு வாரியம் நிரூபிக்கவில்லை. அயோத்தியில் சன்னி வக்பு வாரியம் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் முழுவதையும் இந்துக்கள் தரப்பான ராம்ஜென்ம பூமி நிவாஸிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications