"அவருக்கு" மத்திய அமைச்சர் பதவி?.. விழிக்கும் கட்சிகள்..அடிச்சு தூக்கும் பாஜக.. அனலடிக்கும் தலைநகரம்
டெல்லி: மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் பரபரத்து வரும் நிலையில், யாருக்கு அந்த வாய்ப்பு கிடைக்க போகிறது என்ற அனுமானங்கள் டெல்லியை வட்டமடிக்க துவங்கி உள்ளன.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது... அதேபோல, இன்னும் சில மாதங்களில் எம்பி தேர்தலும் வரப்போகிறது.
சில நாட்களுக்கு முன்பு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தலைவர் நட்டா உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியிருந்தார்..

கூட்டத்தொடர்: இந்த ஆலோசனையின்போது, 5 மாநில பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகக் சொல்லப்பட்டது.. அதிலும், மத்திய அமைச்சரவையிலும், கட்சியிலும் (மாநில அளவில் உட்பட) சில மாற்றங்களை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் சலசலக்கப்பட்டது.
மேலும், இந்த மாதம் மூன்றாவது வாரத்தில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரும் தொடங்க உள்ளதாக தெரிகிறது.. எனவே, அதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை நடத்திவிடுவதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படியே இன்றைய தினம், அதாவது, ஜூலை 3-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது.. இந்தக் கூட்டம் பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
எனினும், இந்த கூட்டத்தில் 2 விதமான முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவதாக, கூட்டத்தில் மறு சீரமைப்பு செய்யப்படும் என தெரிகிறது. குறிப்பாக, கூட்டணி கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அமைச்சரவையில் இடம் பெறக்கூடும் என்கிறார்கள்..
3 மாநில தேர்தல்: சில மாதங்களில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, மிசோரம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளை சேர்ந்த எம்பிக்களுக்கும் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள்..
இரண்டாவதாக, மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதால், அஜித் பவார், பாஜகவுடன் கைகோர்த்து, அந்த மாநில துணை முதல்வராகவும் பதறியேற்றுள்ளார்.. எனவே அவரது அணியை சேர்ந்த பிரஃபுல் படேலுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது.. இது தொடர்பாகவும் பிரதமர் தலைமையிலான இன்றைய கூட்டத்தில் இறுதி விவாதம் நடைபெற உள்ளது.
மத்திய அமைச்சர் பதவி: கடந்த ஒரு வார காலமாகவே, இப்போது மறு சீரமைக்கப்படவுள்ள மத்திய அமைச்சரவையில், தேவேந்திரபட்னாவிஸ் இடம் பெற நிறைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது.. இப்போது இந்த தகவலும் கூடுதலாக பரபரப்பை கூட்டி வருகிறது.
அதைவிட முக்கியமாக, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் சத்தீஸ்கரில் காங்கிரஸ்தான் பாஜகவின் பிரதான போட்டியாளராக உள்ளது. சமீபத்தில், கர்நாடகத்தில் காங்கிரஸிடம் தோல்வியடைந்தநிலையில், இந்த 3 மாநில தேர்தலும் மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாகவே கருதப்படுகிறது. அதனால், 3 மாநில சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகவும் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசிப்பார் என தெரிpfறது.
எதிர்பார்ப்பு: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் கடந்த 2 ஆண்டுகளாகவே குறிப்பிடத்தக்க அளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இருந்தாலும், கிரண் ரிஜிஜு சட்ட அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு புவி அறிவியல் துறை ஒதுக்கப்பட்டது.. அதேபோல, நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சராக உள்ள அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு சட்ட அமைச்சர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.. அந்தவகையில், தற்போது மாற்றியமைக்கப்படும் அமைச்சரவை, பாஜகவுக்கு வலு சேர்க்கும் என்றும் நம்பப்படுகிறது.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications