Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அலறிய Stick shaker.. நூலிழையில் தப்பிய டெல்லி - வியன்னா ஏர் இந்தியா விமானம்.. தீவிர விசாரணை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அகமதாபாத்தில் கடந்த மாதம் 12ம் தேதி ஏர் இந்தியா போயிங் விமானம் விபத்தில் சிக்கியது. இதில் 274 பேர் இறந்தனர். இந்த விபத்து நடந்த அடுத்த 38 மணிநேரத்தில் டெல்லி - வியன்னா போயிங் விமானம் ‛டேக் ஆஃப்' ஆகும்போது திடீரென்று 900 அடி வரை உயரம் குறைந்ததும் விமானத்தில் இருந்த கருவிகள் அலர்ட் செய்ததால் விமானம் நூலிழையில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது தொடர்பான பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக விமான போக்குவரத்து இயக்குநரகம் சார்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து கடந்த மாதம் 12ம் தேதி மதியம் 1:39 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட அடுத்த ஒரு நிமிடத்தில் விபத்தில் சிக்கியது.

விமான நிலையத்தின் அருகே உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என்று மொத்தம் 242 பேர் பயணம் செய்த நிலையில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் பலியாகி உள்ளனர். இதுதவிர விடுதியில் இருந்தவர்கள் உள்பட மொத்தம் 274 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த விமான விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விமான விபத்து புலனாய்வு முகமை (AAIB) விசாரணையை தொடங்கி உள்ளது. தற்போதைய சூழலில் விமானம் புறப்பட்ட நேரத்தில் வானில் பறக்க தேவையான உந்துவிசை கிடைக்காமல் விமானம் கீழே விழுந்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அதற்கான காரணம் இன்னும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. விமானத்தின் கருப்பு பெட்டி இப்போது கிடைத்துள்ளது. அதில் இருந்து தரவுகளை ஆராயும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்பிறகே விபத்துக்கான காரணம் குறித்த உண்மையான காரணம் தெரியவரும்.

இந்நிலையில் தான் தற்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தை தொடர்ந்து அடுத்த 38 மணிநேரத்தில் இன்னொரு ஏர் இந்தியா விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பி உள்ளது. அதாவது கடந்த மாதம் 14ம் தேதி டெல்லியில் இருந்து ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவுக்கு ஏர் இந்தியாவின் ஏஐ 187 விமானம் புறப்பட்டது. இந்த விமானம் போயிங் 777 ரகத்தை சேர்ந்தது.

இந்த விமானம் புறப்பட்ட உடனேயோ ஜிபிடபிள்யூஎஸ் (Ground Proximity Warning System or GPWS) பைலட்டுகளுக்கு அலர்ட் மெசேஜ் கொடுத்தது. இது விமானத்தில் பிரச்சனை இருந்தால் அலர்ட் செய்யும் கருவியாகும். அதன்படி விமானத்தின் தூரம் 900 அடிவரை குறைந்து வருகிறது. இதனால் மேற்கொண்டு விமானத்தின் பறக்கும் அளவை குறைக்க கூடாது என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து பைலட்டுகள் சுதாரித்து கொண்டு விமானத்தை இயக்கினர்.

அதிர்ஷ்வசமாக இந்த விமானம் எந்த விபத்திலும் சிக்கவில்லை. 9 மணிநேரம் 8 நிமிடம் வரை விமானம் பயணித்து பத்திரமாக வியன்னாவுக்கு சென்றது. அதன்பிறகு அங்கிருந்து டொரண்டோவுக்கு விமானம் புறப்பட்டு சென்றது. இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து இயக்குநகரம் விசாரணை மேற்கொண்டது. இதுதொடர்பாக ஏர் இந்தியாவின் பாதுகாப்பு பிரிவின் தலைவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. பைலட்டுகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுதொடர்பாக விமான டிராக்கின் சைட் தரப்பில், ‛‛போயிங் 777 (VT-ALJ) ஜூன் 14ம் தேதி அதிகாலை 2.56 மணிக்கு மோசமான வானிலைக்கு மத்தியில் டெல்லியில் இருந்து புறப்பட்டது. அந்த சமயத்தில் டெல்லியில் கனமழை பெய்தது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகள் சார்பில், ‛‛ ஏர் இந்தியா விமானத்தில் Stick Shaker மற்றும் ஜிபிடபிள்யூபிஎஸ் அலர்ட் கொடுக்கப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஸ்டிக் ஷக்கரில் இருந்து ஒலி வந்துள்ளது. ஜிடபிள்யூபிஎஸ்-ஸில் இருந்து விமானத்தின் உயரம் குறைக்க கூடாது என்று அலர்ட் செய்யப்பட்டுள்ளது. ஸ்டால் வார்னிங் ஒருமுறையும், ஜிபிடபிள்யூஎஸ் வார்னிங் 2 முறையும் கொடுக்கப்பட்டுள்ளது. 900 அடி வரை விமானத்தின் உயரம் குறைந்துள்ளது. இருப்பினும் விமானிகள் சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை வியன்னாவுக்கு கொண்டு சென்று பத்திரமாக தரையிறக்கி உள்ளனர்'' என்றார்.

இதுதொடர்பாக ஏர் இந்தியாவின் செய்தி தொடர்பாளர் சார்பில், ‛‛விமானிகளின் அறிக்கை கிடைத்தது. விதிமுறைகளின்படி DGCA-விடம் தெரிவித்தது. விமானத்தின் பதிவு கருவிகளில் இருந்து தரவுகள் கிடைத்தவுடன் விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையின் முடிவு வரும் வரை விமானிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்படாது'' என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+