பதற்றம் தணியுமா? இந்தியா - பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இயக்குனர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நிறுத்தத்தின் அடுத்தக் கட்டமாக, இந்தியா - பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இயக்குனர்கள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்தியா சார்பில் லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் கய், பாகிஸ்தான் சார்பில் மேஜர் ஜெனரல் அப்துல்லா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில் பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. முன்னதாக பிரதமர் மோடியின் இல்லத்தில் பாதுகாப்பு துறை உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இயக்குனர் இடையேயான பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் வைக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22 ஆம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடியாக தாக்குதல் நடத்தியது.

கடந்த புதன்கிழமை இந்த அதிரடி தாக்குதலை இந்தியா நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் 100 பேர் உயிரிழந்தனர். இதற்காக பாகிஸ்தான் ராணுவம், இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து டிரோன் தாக்குததலை நடத்த முயற்சித்தது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.
இந்தியா கொடுத்த பதிலடியில் நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இந்திய ராணுவ அதிகாரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
ஆனாலும் மீண்டும் அடாவடியாக பாகிஸ்தான் டிரோன்களை ஏவியது. இதற்கும் இந்தியா தக்க பதிலடியை கொடுத்தது. இரவுக்கு பிறகு இந்த தாக்குதல் இல்லை. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 4 நாட்கள் நீடித்து வந்த போர் பதற்றம் சற்று தணிந்தது. நேற்று முதல் எல்லையோர மாநிலங்களில் இயல்பு நிலை திரும்பியது.
பாகிஸ்தான் இனி அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தொடருகிறது. பாகிஸ்தான் தனது அத்துமீறலை தொடர்ந்தால் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும். அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தாக்குதல் நிறுத்தத்தின் அடுத்தக் கட்டமாக, இந்தியா-பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இயக்குனர்கள் இடையேயான பெச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குனர்கள் இடையே இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது. மதியம் 12.00 மணியளவில் இந்தியா சார்பில் லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் கய், பாகிஸ்தான் சார்பில் மேஜர் ஜெனரல் அப்துல்லா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில் பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. முன்னதாக பிரதமர் மோடியின் இல்லத்தில் பாதுகாப்பு துறை உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இயக்குனர் இடையேயான பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் வைக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications