கோபத்தின் உச்சிக்கே சென்று.. அஸ்வினை திட்டிய தோனி?.. சேவாக் வெளியிட்ட பின்னணி.. நடந்தது என்ன?
டெல்லி: சிஎஸ்கே கேப்டன் தோனி குறித்தும் டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அஸ்வின் குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
டெல்லி அணியில் ஆடும் மூத்த வீரர் அஸ்வினுக்கும் கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கும் சில நாட்களுக்கு முன் களத்தில் மோதல் ஏற்பட்டது. இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இணையம் முழுக்க இப்போதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட கடைசி போட்டியில் பண்டும், அஸ்வினும் பேட்டிங் செய்யும் போதுதான் இந்த சண்டை நடைபெற்றது.
பண்ட் ஒரு ரன் அடித்துவிட்டு ஓடிய நிலையில், கொல்கத்தா வீரர் திரிப்பாதி வீசிய ஓவர் த்ரோ பந்து பண்ட் உடலில் பட, அதை பயன்படுத்தி பண்ட் இரண்டாவது ரன் ஓடினார். அஸ்வின் இரண்டாவது ரன்னிற்கு அழைத்த காரணத்தால், இருவரும் இரண்டாவது ரன் எடுத்தனர். பொதுவாக ஓவர் த்ரோ பந்து உடலில் பட்டு சென்றால் வீரர்கள் கூடுதல் ரன் ஓட மாட்டார்கள்.

அஸ்வின்
ஆனால் விதிப்படி இப்படி ரன் ஓடுவது தவறு கிடையாது. இதைத்தான் அன்று அஸ்வினும் செய்தார். ஆனால் இதற்கு இயான் மோர்கன் எதிர்ப்பு தெரிவித்தார். இப்படி இரண்டாவது ரன் ஓடுவது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் கிடையாது என்று கூறி இயான் மோர்கன் கடுமையாக இதை எதிர்த்தார். இதனால் இருவருக்கும் களத்தில் மோதல் ஏற்பட்டது. அதன்பின் கொல்கத்தா பேட்டிங் செய்த போது அஸ்வின் ஆக்ரோஷமாக பவுலிங் செய்தார்.

பவுலிங்
இதில் அஸ்வின் ஓவரில் இயான் மோர்கன் டக் அவுட்டாகி வெளியேறினார். மோர்கன் அவுட்டாகி வெளியேறிய பின் அஸ்வின் மிக கோபமாக கத்தி மோர்கனை பெவிலியனுக்கு வழியனுப்பி வைத்தார். அஸ்வினின் இந்த செயல் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த நிலையில்தான் அஸ்வினுக்கு ஆதரவாக இதில் சேவாக் கருத்து தெரிவித்து இருந்தார். ஸ்பிரிட் ஆப் தி கேம் பற்றி இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பேசலாமா என்று சேவாக் கேள்வி எழுப்பி இருந்தார்.

கருத்து
ஆனால் இப்போது திடீரென அஸ்வினை விமர்சனம் செய்யும் வகையில் சேவாக் புதிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். 2014ல் நடந்த ஐபிஎல் போட்டியை நினைவு கூர்ந்து சேவாக் பேசி உள்ளார். அப்போது சிஎஸ்கே அணியின் அஸ்வின் ஆடி வந்தார். பஞ்சாப் அணியில் சேவாக் ஆடிக்கொண்டு இருந்தார். 2014 சம்பவத்தை நினைவு கூர்ந்து பேசிய சேவாக், அந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் வீரர் மேக்ஸ்வெல் விக்கெட்டை அஸ்வின் எடுத்தார்.

அஸ்வின் விக்கெட்
மேக்ஸ்வெல் விக்கெட்டை எடுத்ததும் , அஸ்வின் கோபமாக நடந்து கொண்டார். பெவிலியன் நோக்கி சென்ற மேக்ஸ்வெல்லை பார்த்து அஸ்வின் மண்ணை அள்ளி வீசுவது போல ஆக்சன் செய்தார். அது பார்க்க நல்ல செயல் போல தெரியவில்லை. அஸ்வின் மீது உடனே தோனி கோபம் அடைந்தார். தோனி உடனே கோபமாக அஸ்வினிடம் சென்று இப்படி செய்யக்கூடாது என்று கூறி அவரை திட்டினார். நானும் அதை பார்த்துக்கொண்டு இருந்தேன்.

கேட்கவில்லை
ஆனால் நான் அன்று அஸ்வினிடம் சென்று அதை பற்றி எதுவும் கேட்கவில்லை. அஸ்வினிடம் ஸ்பிரிட் ஆப் தி கேம் குறித்து நான் அறிவுரை செய்யவில்லை. அவர் செய்தது எனக்கும் பிடிக்கவில்லை. ஆனால் ஆட்டத்திற்கு பின் அதை யாரும் பெரிதுபடுத்தவில்லை. அப்போது அதை பற்றி யாராவது வெளியே பேசி இருந்தால்தான் அது சர்ச்சையாகி இருக்கும். இப்போது அஸ்வின் மோர்கன் சண்டை பற்றி வெளியே பேசியது போல அப்படி யாரும் அதை பெரிதாக்கவில்லை என்று சேவாக் குறிப்பிட்டுள்ளார். அஸ்வின் மோர்கன் சண்டை பெரிதுபடுத்தப்பட்டதை பழைய சம்பவத்தோடு ஒப்பிட்டு சேவாக் பேசி உள்ளார்.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications