ஒரே மாஸ்க்கை அதிக முறை பயன்படுத்தினால்.. கருப்பு பூஞ்சை நோய் ஏற்படலாம்..எய்ம்ஸ் பேராசிரியர் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீரிழிவு பாதிப்பு, ஸ்டீராய்டுகள் பயன்பாடு, ஒரே மாஸ்க்கை அகிக முறை பயன்படுத்துவது ஆகியவை காரணமாக கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவதாக எய்ம்ஸ் பேராசிரியர் சந்திரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை பாதிப்பு தொடர்கிறது. அத்துடன் mucormycosis எனப்படும் கருப்பு பூஞ்சை நோயின் பாதிப்பும் நாட்டில் ஏற்பட்டுள்ளது.

தற்போது வரை இந்த கருப்பு பூஞ்சை பாதிப்பு ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை

கருப்பு பூஞ்சை

இந்தக் கருப்பு பூஞ்சை நோய் புதிய தொற்று இல்லை. இவை ஏற்கனவே இருக்கும் நோய் தான் என்றாலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை இது அதிகமாகத் தாக்குகிறது. கொரோனா நோயாளிகள் சிகிச்சையின் போது ஸ்டீராய்டுகள் அளிக்கப்படுகிறது. இது அவர்களின் உடலில் இருக்கும் நோயதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது. இதனால் அவர்களுக்கு மிக எளிதாக கருப்பூ பூஞ்சை பாதிப்பு ஏற்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

காரணம் என்ன

காரணம் என்ன

இந்நிலையில், கருப்பு பூஞ்சை பாதிப்பு பற்றி எய்ம்ஸ் பேராசிரியர் டாக்டர் சந்திரா கூறுகையில், "நீரிழிவு நோய் அதிகம் உள்ளவர்கள், கொரோனா சிக்சிச்சையின்போது டோசிலிசுமாப் மருந்துகளுடன் ஸ்டீராய்டுகள் எடுத்துக்கொண்டவர்கள், மூச்சுத் திணறல் பிரச்சினை உள்ளவர்கள் ஆகியேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

மருந்துகள்

மருந்துகள்

இவர்களுக்கு கொரோனாவில் இருந்து குணமடைந்து, ஆறு வாரங்கள் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. சிலிண்டரிலிருந்து நேரடியாகக் குளிர்ந்த ஆக்சிஜனை நோயாளிகளுக்கு அளிப்பது மிகவும் ஆபத்தானது. இதுவும் ஒரு காரணம். கருப்பு பூஞ்சை நோயால் எளிதாகப் பாதிக்கப்படுபவர்களுக்கு Posaconazole மருந்தை வழங்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாஸ்க்குகள்

மாஸ்க்குகள்

தொடர்ந்து மாஸ்க்குகள் பற்றிப் பேசிய அவர், "ஈரமான இடத்தில் வைக்கப்படும் துணி மாஸ்க்குகளில் பூஞ்சை பிடிக்கக்கூடும் என்பதால் அப்படி மாஸ்க்குகளை பயன்படுத்தக் கூடாது. N95 மாஸ்க்குகளை ஐந்து முறை பயன்படுத்திவிட்டு அப்புறப்படுத்த வேண்டும். அதேபோல துணி மாஸ்குகளை தினசரி முறையாகத் துவைக்க வேண்டும். வாரத்தில் ஏழு நாட்களும் ஒவ்வொரு மாஸ்க்குகளை பயன்படுத்திவிட்டு, வார இறுதியில் அவற்றைத் துவைத்து, மீண்டும் பயன்படுத்துவது சிறப்பானதாக இருக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

7000 பேர்

7000 பேர்

கருப்பு பூஞ்சை மட்டமின்றி கொரோனா பாதிப்புடன் தொடர்புடைய வேறு சில நோய்களும் இந்தியாவில் பரவிவருவதாக எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இது போன்ற கொரோனா தொடர்புடைய நோய்கள் காரணமாக இந்தியாவில் 7000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+