Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஸ்பமாக்கிட்டீங்களே.. நிர்மலா சீதாராமன் போட்ட போடு.. இதுல சேலஞ்ச் வேற.. பாஜக குஷி.. அரண்ட "தலை"கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் செய்த தவறுகளை சரி செய்ய 10 ஆண்டுகள் தேவைப்பட்டது என்று நிர்மலா சீதாராமன் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு முன்பு இந்தியாவின் பொருளாதார நிலை மற்றும் பிரதமர் மோடி பதவி ஏற்றபிறகு இந்தியாவின் பொருளாதாரத்துடன் ஒப்பிட்டு பாராளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

Did Nirmala Sitharaman slams Congress and UPS Government brought bad name to country, Finance Minister

அறிக்கை: அந்தவகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பிறகு, "இந்தியப் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கை மற்றும் இந்திய மக்களின் வாழ்க்கையில் அதன் தாக்கம்" என்ற தலைப்பில் மக்களவையில் நடைபெற்ற விவாதத்திலும் நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார். அதன் சுருக்கம் இதுதான்:

"UPA காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குட்கா தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான உரிமம் வழங்கப்பட்டது. நிலக்கரி சுரங்கம் அமைக்க உரிமம் வழங்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்ததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது..,.. நிறுவனங்கள் மின் உற்பத்தி செய்ய முடியாத நிலைமையும் ஏற்பட்டது.. இந்த நாடே இருட்டில் மூழ்கியது...

நிலக்கரி: பின்பக்க கதவு வழியாக எங்கள் உறவினர்கள் நிலக்கரி சுரங்கத்தின் உரிமம் பெறுவதை நாங்கள் தடுத்தோம்.. மொத்தத்தில், நிலக்கரியை சாம்பலாக்கி விட்டீர்கள்... ஆனால், நாங்கள் நிலக்கரியை பட்டை தீட்டிய வைரமாக்கியிருக்கிறோம்.. நிலக்கரி சுரங்க ஊழலால் மத்திய அரசுக்கு ரூ.1.6லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. ஆட்சிக்காலத்தில் தவறு செய்துவிட்டு இப்போது காங்கிரஸ் முதலை கண்ணீர் வடிக்கிறது.

நிலக்கரி ஊழல் தொடர்பான சிஏஜி அறிக்கையில், இந்தியாவுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால், உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உங்களால் கையாள முடியவில்லை. அதை எப்படி கையாள வேண்டும் என்று இப்போது பாடம் எடுக்கிறார்கள்.

வளர்ச்சி திட்டங்கள்: காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி திட்டங்கள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு மறைமுகமாக காங்கிரஸ் அரசு சலுகைகளை வழங்கியது...

2008 -ல் பொருளாதார நெருக்கடி ஒன்றும், கொரோனா நெருக்கடி காலம் போல் தீவிரமாக இல்லை. எனவே, காங்கிரஸ் அரசாங்கம் நேர்மையாக அதை கையாண்டிருக்க வேண்டும். நாட்டின் நலனை பாதுகாக்க எதையுமே செய்யவில்லை... ஆனால் ஊழல் மேல் ஊழல் மட்டும் நீண்டது..

இப்படிபட்ட சூழ்நிலையில்தான் ஆட்சியில் இருந்து வெளியேறினார்கள். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் செய்த தவறுகளை சரி செய்ய 10 வருடங்கள் தேவைப்பட்டது. பலவீனமாக இருந்த பொருளாதாரத்தை கடும் சவால்களுக்கு இடையே பாஜக அரசு மீட்டுள்ளது.

பலவீனம்: 2014-ல் மிகவும் மோசமான நிலையில் இருந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்தவர் பிரதமர் மோடி... மோடி அரசு நேர்மையுடன் செயல்பட்டு, பொருளாதாரத்தை பலவீனமான நிலையிலிருந்து மீட்டு, உலகளவில் முதல் 5 இடங்களுக்குள் கொண்டுவந்துள்ளது. இது விரைவில் உலகின் முதல் 3 இடங்களில் ஒன்றாக மாறும்.
காங்கிரஸ் கட்சி குடும்பத்தை மட்டுமே முன்னிறுத்தியது.. ஆனால் பாஜக ஆட்சியில், நாங்கள் நாட்டை முன்னிறுத்துகிறோம். உலகளாவிய நிதி நெருக்கடியைக் கையாள முடியாமல், ஊழல், முறைகேடுகளை தொடர்ந்த கட்சி, இப்போது மோடி அரசுக்கு பாடம் நடத்துகிறது" என்றார்.

நெருக்கடிகள்: நிர்மலா சீதாராமன் இவ்வாறு உரையாற்றியபோது, காங்கிரஸ் எம்பிக்கள் குறுக்கிட்டனர்.. பலத்த எதிர்ப்பும் தெரிவித்தனர்... ஆனால், அதற்கும் நிர்மலா சீதாராமன் சளைக்கவில்லை.

"உங்களுக்குத் தைரியமிருந்தால், என் பேச்சுக்கு இடையூறு செய்யாமல் நான் சொன்னதுக்கெல்லாம் பதிலளியுங்கள்.. என்னுடைய உரையை கேட்டு, பதில் சொல்ல தயாரா? என்று நிர்மலா சீதாராமன் சவால் விடுத்தார்.. இதனால் காங்கிரஸ் எம்பிக்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பிக்கொண்டேயிருந்ததால், சிறிது நேரம் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+