டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடேங்கப்பா! தமிழ்நாடு நிறுவனம் இத்தனை கோடி மோசடி செய்ததா? பரிதாபகரமான நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி

Google Oneindia Tamil News

டெல்லி: ஐ.எல்.எஃப்.எஸ் தமிழ்நாடு பவர் நிறுவனத்தின் செயல்படாத வங்கி கணக்கில் இருந்து ரூ.2,060 கோடி கடன் மோசடி நடைபெற்று இருப்பதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்து இருக்கிறது

பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் ரூ.824.06 கோடி கடன் மோசடி செய்துவிட்டு தொழிலதிபர் நிரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

5 மாநில சட்டசபை தேர்தல்களில் தோல்வி- டெல்லியில் காங். அதிருப்தி தலைவர்கள் இன்று ஆலோசனை 5 மாநில சட்டசபை தேர்தல்களில் தோல்வி- டெல்லியில் காங். அதிருப்தி தலைவர்கள் இன்று ஆலோசனை

இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் நடைபெற்ற மோசடிகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில்தான் நிரவ் மோடியை மிஞ்சும் அளவுக்கு மோசடி நடைபெற்ற மோசடி குறித்துபஞ்சாப் நேஷனல் வங்கி வாய்திறந்து உள்ளது.

ஐ.எல்.எஃப்.எஸ். நிறுவனம்

ஐ.எல்.எஃப்.எஸ். நிறுவனம்

மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, குர்கான் ஆகிய இடங்களில் கிளைகளை பரப்பி இருக்கும் மிகப்பெரிய உள்கட்டமைப்பு மற்றும் நிதி நிறுவனமான (IL&FS) ஐ.எல்.எஃப்.எஸ் தமிழ்நாடு பவர் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் பல்வேறு மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி புகார்

பஞ்சாப் நேஷனல் வங்கி புகார்

இதனிடையே இந்த நிறுவனத்தின் கணக்கில் இருந்து ரூ.2,060.14 கோடி கடன் மோசடி நடந்து இருப்பதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்து இருக்கிறது. செயல்படாத இந்த வங்கிக் கணக்கின் மூலம் டெல்லி மண்டல அலுவலகத்தில் இருந்து இந்த மாபெரும் மோசடி அரங்கேறி இருப்பதை பஞ்சாப் நேஷனல் வங்கி உறுதிபடுத்தி உள்ளது.

ரிசர்வ் வங்கியிடம் புகார் - மோசடி என அறிவிப்பு

ரிசர்வ் வங்கியிடம் புகார் - மோசடி என அறிவிப்பு

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி இந்த நிறுவனம் ரூ.148 கோடி கடனை செலுத்தாமல் இருப்பதாக ரிசர்வ் வங்கியிடம் தாங்கள் புகார் அளித்ததாகவும், அதன் அடிப்படையில் அது மோசடி என்று அறிவிக்கப்பட்டு இருப்பதையும் பஞ்சாப் நேஷனல் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி ஐ.எல்.எஃப்.எஸ். நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு நிலுவையில் வைத்திருந்த கடன் தொகை ரூ.94,000 கோடியாக இருந்தது. இதனை சிறிது சிறிதாக அந்த நிறுவனம் செலுத்தி வந்தது.

கடலூர் அனல் மின் திட்டத்துக்காக கடன்

கடலூர் அனல் மின் திட்டத்துக்காக கடன்

ஆனால், ஐ.எல்.எஃப்.எஸ். தமிழ்நாடு பவருக்காக பெற்ற ரூ.2,060.14 கோடியை அந்த நிறுவனம் இன்னும் செலுத்தாமல் இருந்து வந்துள்ளது. இதைதான் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியாக அறிவித்து இருக்கிறது. Infrastructure Leasing & Financial Services Ltd (IL&FS) நிறுவனத்தின் மூலம் கடலூரில் அனல் மின் திட்டங்களுக்கான கட்டமைப்பை நிறுவி செயல்படுத்துவதற்காக ஐ.எல்.எஃப்.எஸ் தமிழ்நாடு பவர் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Punjab National Bank (PNB) has alleged that Rs 2,060 crore was loan fraud by ILFS Tamil Nadu Power's bank account.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X