இரு தடுப்பூசிகளுக்கு வெவ்வேறு விலையா.. மத்திய அரசு என்ன செய்கிறது?.. விளாசிய உச்சநீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா தடுப்பூசியை தயார் செய்யும் இரு வேறு நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள இரு வேறு விலை குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாரத் பயோ டெக் நிறுவனமும் இந்திய மருத்துவ கவுன்சிலும் இணைந்து கோவாக்சின் தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்தன. இதையடுத்து சீரம் நிறுவனமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கோவிஷீல்டு எனும் தடுப்பூசியை தயாரித்தன.

Different manufacturers coming with different prices, supreme court asks

இரு தடுப்பூசிகளுக்கும் சீரம் நிறுவனமும் பாரத் பயோடெக் நிறுவனமும் விலையை நிர்ணயித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி மாநில அரசுக்கு ரூ 400-க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ 600-க்கும் மத்திய அரசுக்கு ரூ 150க்கும் விற்பனை செய்ய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசியை அரசு மருத்துவமனைகளுக்கு ரூ 600 க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ 1200 க்கும் விற்பனை செய்வதாக பாரத்பயோ டெக் விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்த இரு வேறு விலையேற்றத்தால் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்த நிலையில் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து விசாரணை நடத்தியது. நீதிபதிகள் சந்திரசூட், எல் நாகேஸ்வர ராவ் மற்றும் ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அதில் கோவிட் தடுப்பூசிகளை வெவ்வேறு தயாரிப்பாளர்கள் வெவ்வேறு விலைகளை நிர்ணயித்துள்ளன.

மத்திய அரசு என்ன செய்துக் கொண்டிருக்கிறது? தற்போது கொரோனா பெருந்தொற்றாக உள்ளது. தேசிய பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது. உங்களின் அதிகாரத்தை இப்போது பயன்படுத்தாமல் எப்போது பயன்படுத்த போகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.. இந்த விலை மாற்றம் குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+