Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவின் 'யுபிஐ'.. சிங்கப்பூரின் 'பே நவ்' இணைப்பு.. ஆஹா இவ்வளவு பலன்களா.. சூப்பர்!

இந்த இணைப்பின் மூலம் தற்போது சிங்கப்பூர் மற்றும் இந்தியாவுக்கு இடையே வெறும் செல்போனை பயன்படுத்தியே பணம் அனுப்ப முடியும்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறையான யுபிஐ (UPI) மற்றும் சிங்கப்பூரின் பணப்பரிமாற்ற முறையான 'பே நவ்' (Pay Now) ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.

2021-ம் ஆண்டே இந்த இரண்டு பணப்பரிமாற்ற முறைகளையும் இணைக்க மேற்கொண்ட முயற்சி இன்றுதான் கைக்கூடியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் சியன் லூங் ஆகியோர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்த இணைப்பால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.. யார் யார் பலனடைவார்கள் என்பது குறித்து இங்கு காணலாம்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை

காகித பணப்பரிவர்த்தனைக்கு பதிலாக, டிஜிட்டல் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்யும் நடைமுறை அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டன. இந்தியாவில் இந்த நடைமுறை 8 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வரப்பட்டாலும், கொரோனாவுக்கு பிறகுதான் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை பெரும்பாலானோர் மேற்கொள்ள தொடங்கினர்.

இந்தியாவின் யுபிஐ

இந்தியாவின் யுபிஐ

இந்தியாவை பொறுத்தவரை, ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறையான யுபிஐ மூலம் இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக பல யுபிஐ ஆப்களும் இருக்கின்றன. கூகுள் பே, பேடிஎம், பாரத் பே போன்ற ஆப்களை பொதுவாக ஏராளமானோர் பயன்படுத்தி வருகிறார்கள். ஒருவரின் செல்போன் எண் அல்லது வங்கிக்கணக்கு எண் ஆகியவற்றின் மூலமே இந்தியாவுக்குள் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த யுபிஐ ஆப்கள் மூலமாக நாம் பணம் அனுப்பவும், பெறவும் முடியும். வங்கிக்கணக்கு எண் விவரங்களை ஏதும் தர தேவையில்லை என்பதாலும், விரைவாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதாலும் இந்த முறையை பலரும் விரும்புகிறார்கள்.

யுபிஐ - பே நவ் இணைப்பு

யுபிஐ - பே நவ் இணைப்பு

இந்தியாவில் எப்படி யுபிஐ இருக்கிறதோ, அதுபோலே சிங்கப்பூரில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு அடிப்படையாக இருக்கும் முறைதான் 'பே நவ்'. கிட்டத்தட்ட யுபிஐ போலவேதான், விபிஏ முகவரியின் (VPA Address) அடிப்படையில் இதில் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. சிங்கப்பூருக்குள் இருக்கும் இரு நபர்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் இந்த 'பே நவ்' முறையை பயன்படுத்தி பணத்தை உடனடியாக பெற்றுக்கொள்ளவோ, அனுப்பவோ முடியும். இந்நிலையில்தான், இந்த இரு நாடுகளின் டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறைகளான யுபிஐ, பே நவ் இணைக்கப்பட்டுள்ளன.

யாருக்கு பலன்?

யாருக்கு பலன்?

இந்த இணைப்பின் மூலம் தற்போது சிங்கப்பூர் மற்றும் இந்தியாவுக்கு இடையே வெறும் செல்போனை பயன்படுத்தியே பணம் அனுப்ப முடியும். பொதுவாக, வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு பணம் அனுப்புவதை வங்கிகளின் அந்நிய செலாவணி முறையின் மூலமாகவே மேற்கொள்ள முடியும். ஆனால், தற்போது டிஜிட்டல் மூலமாகவே பணத்தை அனுப்பவும், சிங்கப்பூரில் இருக்கும் ஒருவரிடம் இருந்து பணத்தை பெறவும். சிங்கப்பூரில் கணிசமான எண்ணிக்கையில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் வசிக்கிறார்கள். எனவே அவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்திய அரசு இந்த இணைப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+