இந்தியாவை சீண்டிய கனடா.. பதவியை விட்டு போங்க! ஜஸ்டின் ட்ரூடோவுக்கு குழி பறிக்கும் லிபரல் கட்சி?
டெல்லி: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பாக இந்தியா மீதான புகார்கள் காரணமாக கனடா -இந்தியா இடையேயான தூதரக உறவு முறித்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது.
காலிஸ்தான் விவகாரம் தொடர்பாக கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தொடர்ந்து பல ஆண்டுகளாக பிரச்சனை நீடிக்கிறது. சீக்கியர்களுக்கு என காலிஸ்தான் என்ற தனிநாடு வேண்டுமென்ற முழக்கத்துடன் காலிஸ்தான் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டுகளில் இந்தியாவில் பல பயங்கரவாத நடவடிக்கைகளிலும் இந்த இயக்கம் ஈடுபட்டது. இதனை அடுத்து இந்தியாவில் இந்த இயக்கம் ஒடுக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் வசிக்கும் பல சீக்கியர்கள் காலிஸ்தான் கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக கனடாவில் வசிக்கும் சீக்கியர்கள் காலிஸ்தான் கோசம் எழுப்பி வருவதோடு சில இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் கனடாவில் வசிக்கும் சீக்கியர்களுக்கு ஆதரவாக பேசி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்று பேசிய சீக்கியர்கள் கூட்டத்தில் காலிஸ்தான் முழக்கம் எழுப்பப்பட்டது. இதனையடுத்து டெல்லியில் கனடா தூதரை அழைத்து கடும் கண்டனங்களை தெரிவித்ததுஇந்தியா.
முன்னதாக சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கடாவில் கொல்லப்பட்டார் இந்தியாவுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறிய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய தூதரக உயர் அதிகாரியான சஞ்சய் குமார் வர்மா மற்றும் பிற இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக இருப்பதாக கனடா கூறியதை அடுத்துஇரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் கனடாவில் இருக்கும் இந்திய தூதர் மற்றும் சில அதிகாரிகளை இந்தியா திரும்ப பெற்றுக் கொள்வதாக அதிரடியாக அறிவித்தது.
மேலும், கனட அரசுக்கு அடுத்த நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக , இந்தியாவில் இருக்கும் ஆறு கனட தூதர்களை வெளியேறுமாறு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கனடாவின், ஸ்டீவர்ட் ரோஸ் வீலர் - செயல் உயர் தூதர், பேட்ரிக் ஹெபர்ட் - துணை உயர் தூதர் உள்ளிட்டோர் அக்டோபர் 19, 2024 சனிக்கிழமை இரவு 11:59 மணிக்குள் அல்லது அதற்கு முன் இந்தியாவை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனடா இந்தியா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென ஆளும் அவரது கட்சியினரே கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பேசிய கனடா லிபரல் கட்சியை சேர்ந்த எம்பி ஆன சீன் கேஸே," கன்னட மக்கள் ஜஸ்டின் பதவி விலக விரும்புகிறார்கள்" என கூறியுள்ளார்.
மேலும் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியினுடையே உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது அவருக்கு எதிராகவே கட்சியினர் பேச தொடங்கி இருக்கின்றனர். குறிப்பாக இந்தியாவுடன் முடிவுக்குப் பிறகு லிபரல் கட்சி செல்வாக்கு மிகுந்த பகுதியாக பலம் வந்த டோராண்டோ செயின்ட் பாலில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் அக்கட்சி தோல்வி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications