டி.கே சிவக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்.. டெல்லி ஹைகோர்ட் அதிரடி.. திஹாரிலிருந்து விடுதலை!

பணமோசடி வழக்கில் கைதான காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே சிவக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    DK Shiva Kumar gets bail in ED case

    டெல்லி: பணமோசடி வழக்கில் கைதான காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே சிவக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் டிகே சிவக்குமார் கைது செய்யப்பட்டார். ஹவாலா மோசடி, வரி ஏய்ப்பு, முறைகேடாக பணம் சேர்ந்தது உட்பட பல்வேறு வழக்குகளின் கீழ் தற்போது டிகே சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.

    கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் அவரது டெல்லி வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.8.59 கோடி பணம் சிக்கியது. இதையடுத்து அவர் மீது பண மோசடி வழக்கு அமலாக்கத்துறை துறை மூலம் போடப்பட்டது.

    கைது செய்யப்பட்டார்

    கைது செய்யப்பட்டார்

    இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறை மூலம் விசாரிக்கப்பட்ட டி.கே சிவக்குமார் செப்டம்பர் 3ந்தேதி கைது செய்யப்பட்டார். டெல்லி சிறப்பு உயர் நீதிமன்றத்தில் டிகே சிவக்குமார் ஆஜர்படுத்தப்பட்டு, அதன்பின் அமலாக்கத்துறை மூலம் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார். இவர் 13 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார்.

    விசாரணை முடிவு

    விசாரணை முடிவு

    13 நாள் விசாரணை முடிந்த பின், நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் 17ம் தேதி நீதிமன்ற காவலில் திகார் சிறையில் டி.கே சிவக்குமார் அடைக்கப்பட்டார். அதன்பின் டி.கே சிவக்குமார் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். ஆனால் அங்கு ஜாமீன் மறுக்கப்படவே டெல்லி ஹைகோர்ட்டில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார்.

    மோசமான உடல்நிலை

    மோசமான உடல்நிலை

    இடையில் டி.கே சிவக்குமாருக்கு உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கெய்த் முன் விசாரணைக்கு வந்தது. இதில் டி. கே சிவக்குமாரின் உடல்நிலை காரணமாக கூறப்பட்டு, ஜாமீன் கோரப்பட்டது.

    ஜாமீன் கிடைத்தது

    ஜாமீன் கிடைத்தது

    இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று டி.கே சிவக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சிபிஐ நீதிமன்றம் ஜாமீனை மறுத்த நிலையில் டெல்லி ஹைகோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது. டி.கே சிவக்குமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அனுமதி இல்லாமல் வெளிநாடு செல்ல கூடாது. சாட்சிகளை சந்திக்க கூடாது என்று நிபந்தனையுடன் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

    இன்று விடுதலை

    இன்று விடுதலை

    இதனால் தற்போது டி.கே சிவக்குமார் திகார் சிறையில் இருந்து விடுதலை ஆகிறார். இன்று இரவு சிவக்குமார் விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+