காங்கிரஸ் கட்சிக்கு “36 + 2”.. டெல்லியில் ராகுல் - கனிமொழி மீட்டிங்கில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வரும் தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக சார்பில் 36 தொகுதிகள் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் இல்லத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி நடத்திய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் 2 ராஜ்ய சபா இடங்களை வழங்கவும் திமுக முன் வந்ததாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோஷத்துடன் காய் நகர்த்தி வருகிறது. இதனால் கூட்டணியை உறுதிப்படுத்துவதிலும், தொகுதி உடன்பாடு எட்டுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

DMK Congress Alliance kanimozhi Rahul Gandhi Tamil Nadu Assembly Election 2026

ராகுல் காந்தி - கனிமொழி சந்திப்பு

அட்ஜஸ்ட் செய்து தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதே நல்லது என்றும், நமது உரிமைகளை வழங்காத பட்சத்தில் தி.மு.க. கூட்டணி தேவையில்லை என்றும் இருவேறு கருத்துகள் காங்கிரசில் நிலவி வருகின்றன. இதனால் காங்கிரஸ் எடுக்கப் போகும் முடிவு என்ன என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் இரு கட்சிகளையும் சேர்ந்த நிர்வாகிகள் திடீரென்று பரபரப்பான கருத்துகளை வெளியிடுவது, இரு கட்சிகளுக்கிடையேயும் உரசலை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய பரபரப்பான சூழலில் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி இன்று சந்தித்து பேசினார்.

முக்கிய முடிவு எடுக்கப்படுகிறதா?

சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ராகுல் காந்தியுடன் கனிமொழி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதில் வரும் தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக சார்பில் 36 தொகுதிகள் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் இல்லத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி நடத்திய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் 2 ராஜ்ய சபா இடங்களை வழங்கவும் திமுக முன் வந்ததாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 25 தொகுதிகளை ஒதுக்கியிருந்த நிலையில் தற்போது கூடுதலாக ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு, 40 சீட்கள் வேண்டும் என்று பேசி வருவதால் கூட்டணியில் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டு வந்தது. இத்தகைய சூழலில் ராகுல் காந்தியுடனான கனிமொழி சந்திப்பில் கூட்டணி சீட் பங்கீடு தொடர்பாக முடிவு இறுதி செய்யப்படலாம் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+