Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலையின் பாதயாத்திரையால் திமுக கலக்கம்! லோக்சபாவில் தயாநிதி மாறனுக்கு, அமித்ஷா பதிலடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று திமுக எம்பி தயாநிதி மாறன் ஆக்ரோஷமாக லோக்சபாவில் பேசினார். இதற்கு மத்திய உள்துறை அமைச்சர், ‛‛அண்ணாமலையில் பாதயாத்திரையில் திமுக கலக்கமடைந்துள்ளது'' என பதிலடி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

நம் தலைநகர் டெல்லி யூனியன் பிரதேசமாக உள்ளது. இங்கு ஆம்ஆத்மியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். டெல்லி யூனியன் பிரதேசமாகவும், தலைநகராகவும் இருப்பதால் துணை நிலை ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் கூடுதலாக அதிகாரங்கள் உள்ளன.

DMK is disturbed by Annamalais Padayatra in Tamil Nadu, Amit Shah reply to Dayanidhi Maran in Parliament

குறிப்பாக குடிமைப்பணி அதிகாரிகள் நியமனம் செய்வதில் மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் இடையே கடும் பிரச்சனை இருந்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் குடிமைப்பணி அதிகாரிகள் நியமனத்தில் டெல்லிக்கு என்று மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு தான் உரிமை உள்ளதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

இது மத்திய அரசு பின்னடைவை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நீர்த்து போகச் செய்யும் வகையில் உடனடியாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்தது. இதற்கான சட்ட மசோதா நேற்று நாடாளுமன்ற லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது பல கட்சி எம்பிக்கள் பேசினர்.

காங்கிரஸ் சார்பில் சசிதரூர், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுப்ரியா சுலே, ஏஐஎம்ஐஎம் சார்பில் அசாதுதீன் ஓவைசி, ஐக்கிய ஜனதாதளம் சார்பில் ராஜீவ் ரஞ்சன் சிங், திமுக சார்பில் தயாநிதி மாறன், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் கல்யாண் பானர்ஜி உள்ளிட்டவர்கள் பேசினார். இவர்கள் அனைவரும் டெல்லி சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பேசினர்.

DMK is disturbed by Annamalais Padayatra in Tamil Nadu, Amit Shah reply to Dayanidhi Maran in Parliament

இந்த வேளையில் திமுக எம்பி தயாநிதி மாறன் ஆக்ரோஷமாக பேசினார். அப்போது அவர், ‛‛பிரதமர் மோடி மணிப்பூர் பற்றி விவாதிக்க சபைக்கு வரமறுக்கிறார். 25 ஆண்டுகளாக டெல்லியை பாஜக ஆளவில்லை. ஆனால் ஆம்ஆத்மி டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்புக்கும் சென்றுவிட்டது. இதனை ஜீரணிக்க முடியாமல் சட்ட திருத்த மசோதா கொண்டு வந்துள்ளீர்கள். உச்சநீதிமன்றம் கூறியும் இதனை செய்கிறீர்கள்.

அப்படியானால் உங்களுடைய நோக்கம் என்ன? டெல்லி அரசை கட்டுப்படுத்த வேண்டும் தானே? அதிகாரம் குறைக்கப்பட வேண்டும் என்பதுதானே? அங்குள்ள அதிகாரிகளை பாஜக சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை. இதனால் திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது. தமிழக ஆளுநர் 13 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். எனவே, மாநில அரசுகளுக்கு ஆளுநர் தேவையில்லை'' என ஆக்ரோஷமாக தெரிவித்தார்.

இதையடுத்து அமித்ஷா விளக்கம் அளித்தார். அப்போது அவர் இந்தியா கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். மேலும் தமிழக எம்பி தயாநிதி மாறனுக்கும் அவர் பதிலடி கொடுத்தார். இதுதொடர்பாக அமித்ஷா பேசுகையில், ‛‛"நீங்கள் (எதிர்க்கட்சிகள்) ஒன்றாக இணைந்தால் 2024ல் மோடி தோல்வியடைவார் என நம்புகிறீர்கள். அது நடக்காது. உங்களால் மோடியை வீழ்த்த முடியாது. அடுத்த பிரதமர் நரேந்திர மோடி தான். உங்களுக்கு நாட்டு மக்கள் மீதும் ஜனநாயகம் மீதும் அக்கறை இல்லை.

இதனால் தான் ஒவ்வொரு மசோதா கொண்டு வரும்போதும் மணிப்பூர் பிரச்சனையை எழுப்பி விவாதத்தில் பங்கேற்றாமல் போகிறீர்கள். ஆனால் ஆம்ஆத்மி கூட்டணியில் உள்ளதால் இதில் பங்கேற்று உள்ளீர்கள். தற்போதும் கூட்டணியை காப்பாற்ற வேண்டும் என்றே இங்கு இருக்கீறீர்கள். உங்களின் செயலை இந்திய மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் இந்த மசோதா நிறைவேறியதும் உங்களின் கூட்டணியில் இருந்து கெஜ்ரிவால் விலகுவார்.

DMK is disturbed by Annamalais Padayatra in Tamil Nadu, Amit Shah reply to Dayanidhi Maran in Parliament

மேலும் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். டெல்லி என்பது மாநிலம் அல்ல. அது யூனியன் பிரதேசம்'' என எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‛‛இந்தியா'' கட்சிகளை சாடினார். அதன்பிறகு தமிழக எம்பி தயாநிதி மாறனுக்கு பதிலடி கொடுத்தார். இதுதொடர்பாக அமித்ஷா கூறும்போது‛‛தமிழ்நாட்டல் அண்ணாமலை பாதயாத்திரை நடத்தி வருகிறார். இதனால் திமுக கலக்கமடைந்துள்ளது. இது தயாநிதி மாறனின் உரையில் எதிரொலித்து இருக்கிறது'' என தெரிவித்து பரபரப்பை கிளப்பினார்.

தமிழ்நாட்டில் பாஜக தனது கட்டமைப்பை பலப்படுத்த முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பெயரில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பாதயாத்திரையை தொடங்கி உள்ளார். இந்த பாதயாத்திரையை சில நாட்களுக்கு முன்பு அமித்ஷா தொடங்கி வைத்தார். இத்தகைய சூழலில் தான் அமித்ஷா அண்ணாமலையின் பாதயாத்திரையை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டு தயாநிதி மாறனை விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+