Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“எது! பட்டுக்கோட்டை.. கொட்டை பாக்கா?” என்னாச்சு? டென்ஷன் ஆன திமுக எம்பி ஆ.ராசா.. காரணத்தை பாருங்க

ஜேஎன்யுவில் நடந்த வன்முறை குறித்து எழுப்பிய கேள்விக்கு கிடைத்த மத்திய அரசின் பதிலை திமுக எம்பி ஆ.ராசா விமர்சித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த மாதம் 19ம் தேதியன்று டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட வன்முறை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்பி ஆ.ராசா எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. இந்த பதிலை அவர் பகிர்ந்திருக்கிறார். தற்போது மத்திய அரசின் பதில் பேசுபொருளாகியுள்ளது.

ஜேஎன்யு பல்கலைக்கழகம் தலைசிறந்த மாணவர்களை உருவாக்கி இருக்கிறது. இங்கு பயின்ற பலர் அரசியல்வாதிகளாகவும், கல்வியாளர்களாகவும், பொருளாதார நிபுணர்களாகவும் என பல்வேறு துறைகளில் முக்கிய தலைவர்களாக இருக்கின்றனர். இந்த பல்கலைக்கழகம் தொடக்கத்திலிருந்து இடதுசாரி சிந்தனையாளர்களின் கூடாரமாக இருந்து வருகிறது. ஆனால் சமீப நாட்களாக வலதுசாரிகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதால் இரு தரப்பினருக்கிடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.

அப்படி நடந்த மோதல் சம்பவத்தில்தான் 'தந்தை பெரியர்' படம் அகற்றப்பட்டது. அதாவது பிப்ரவரி 19ம் தேதியன்று இரவு சுமார் 9 மணியளவில் '110 பிளவர்ஸ்' எனும் மாணவர் அமைப்பினர் சிலர் 'டெப்ளாஸ்' எனும் அலுவலகத்தில் திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்த அலுவலகம் மாணவர் பேரவைக்கான அலுவலகமாகும். வழக்கமாக பல்வேறு மாணவர் அமைப்பினர் இங்கு படங்களை திரையிடுவார்கள். இதேபோலதான் அன்றும் திரையிடல் தொடங்கியது.

 திரையிடல்

திரையிடல்

இதற்காக அலுவலக சுவரில் மாட்டப்பட்டிருந்த தலைவர்களின் படங்கள் எடுத்து கீழே வைக்கப்பட்டன. அதில் சத்ரபதி சிவாஜியின் படமும் ஒன்று. அன்று சிவாஜியின் பிறந்தநாள். எனவே அவரை கொண்டாடும் ஏபிவிபி அமைப்பினர் அவரின் படத்திற்கு மாலை அணிவித்திருந்தனர். ஆனால் திரையிடலுக்காக மற்ற தலைவர்களின் படத்துடன் சிவாஜியின் படமும் கீழே இறக்கி வைக்கப்பட்ட சம்பவம் ஏபிவிபி அமைப்பினரை ஆத்திரமூட்டியது. இங்குதான் மோதலுக்கான புள்ளி விழுந்தது. திரையிடல் நடத்திய மாணவர்களுக்கும், ஏபிவிபி மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.

வாக்குவாதம்

வாக்குவாதம்

பின்னர் இது கைகலப்பாக வெடித்தது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த நாசர் எனும் மாணவர் கடுமையாக தாக்கப்பட்டார். அவருடைய மண்டை உடைக்கப்பட்டதில் ரத்தம் வழிந்தோடியது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இவரையடுத்து மேலும் சில மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் பெரியார் படம் கிழிக்கப்பட்டு குப்பையில் வீசப்பட்டது. இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

மோதல்

மோதல்

இதனையடுத்து தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக எம்பி செந்தில் குமார் உடனடியாக ஜேஎன்யு பல்கலைக்கழகத்திற்கு சென்று தமிழக மாணவர்களை நேரில் சந்தித்தார். பின்னர் புதியதாக பெரியார் படத்தையும் அம்மாணவர்களுக்கு வழங்கினார். திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜேஎன்யு பல்கலைக்கழகம் தெரிவித்தது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திமுக எம்பி ஆ.ராசா நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியிருந்தார்.

 கேள்வி

கேள்வி

இதற்கு மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இந்த பதிலை டிவிட்டரில் பகிர்ந்த அவர், "டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டார்களா? தந்தை பெரியார் படம் எரிக்கப்பட்டதா? என்று பாராளுமன்றத்தில் நான் கேட்ட கேள்விக்கு பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை பத்து பைசா என்று பதில் வருகிறது‌" என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது இவர் கேட்ட கேள்விக்கு, "ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். நிர்வாகக் குழுதான் இந்நிறுவனம் தொடர்பான அனைத்து முடிவுகளையும் மேற்கொள்கிறது. ஜேஎன்யுவில் தற்போது 9000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

பதில்

பதில்

கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதியன்று மாலை பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தியதாக நிர்வாகம் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இச்சமயத்தில் சில மாணவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது என்றும், நிர்வாகத்தின் தலையீட்டால் நிலைமை இயல்புக்கு திரும்பியது. பல்கலைக்கழகத்தில் அமைதியான மற்றும் இணக்கமான சூழலை பேணுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழுவையும் பல்கலைக்கழகம் அமைத்துள்ளது" என்று கூறப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+