Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

73000 பேர் பேசும் சமஸ்கிருதத்திற்கு ஏன் மொழிமாற்றம்? வரிப்பணத்தை வீண் பண்றீங்க: தயாநிதி மாறன் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று திமுக எம்.பி தயாநிதி மாறன் - சபாநாயகர் ஓம் பிர்லா இடையே காரசார விவாதம் நடந்தது. எம்.பிக்கள் பேசுவது சமஸ்கிருத மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்படும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தார் தயாநிதி மாறன்.

நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் உரையாற்றும்போது, மற்ற எம்.பிக்கள் தங்களுக்கு புரியும் மொழியில் ஹெட்போன் வாயிலாக கேட்டுக்கொள்ளலாம். அதற்கு ஏற்ப, உடனுக்குடன் மொழிமாற்றம் செய்யும் வசதி அந்த ஹெட்போனில் செய்யப்பட்டிருக்கும். இந்நிலையில். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவது உடனுக்குடன் மேலும் 6 மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது என மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா இன்று அறிவித்தார்.

Dayanidhi Maran Om birla sanskrit

ஏற்கனவே தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கள் மொழிபெயர்க்கப்படுகின்றன. கூடுதலாக உருது, மணிபுரி, போடோ, டோக்ரி, சமஸ்கிருதம் மற்றும் மைதிலி ஆகிய மொழிகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கள் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்படுகின்றன என சபாநாயகர் ஓம் பிர்லா இன்று மக்களவையில் அறிவித்தார்.

அப்போது, திமுக எம்.பி தயாநிதிமாறன் எழுந்து எம்.பிக்களின் பேச்சை சமஸ்கிருதத்துக்கு மொழிமாற்றம் செய்து தெரிவிக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். "எதற்காக சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கிறீர்கள்?" என சபாநாயகரை பார்த்து கேள்வி எழுப்பினார் தயாநிதி மாறன்.

மாநில மொழிகளுக்கு இந்த மொழிமாற்றம் வசதி வரவேற்கிறோம். அதேவேளையில், சமஸ்கிருதம் எந்த மாநிலத்தின் அலுவல் மொழியாக இருக்கிறது என்பதைக் கூற முடியுமா? 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, சமஸ்கிருத மொழியை 73 ஆயிரம் நபர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அந்த மொழியில் மொழிபெயர்ப்பது மக்கள் பணத்தை வீணடிப்பதாகும் என தயாநிதி மாறன் விமர்சனம் செய்தார்.

தொடர்பு மொழியாகக் கூட இல்லாத சமஸ்கிருதத்துக்கு எதற்காக வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிக்கிறீர்கள்? ஆர்.எஸ்.எஸ் கொள்கைக்காக எதற்காக வரிப் பணத்தை வீணடிக்கிறீர்கள்?" என தயாநிதி மாறன் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, "சமஸ்கிருதம் இந்தியாவின் மூல மொழி. நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுகளை மொழிபெயர்க்க உள்ளோம். உங்களுக்கு சமஸ்கிருதத்தில் மொழிபெயர்ப்பதால் என்ன பிரச்சனை?" எனக் கேள்வி எழுப்பினார். லோக்சபா சபாநாயகர் - திமுக எம்.பி தயாநிதி மாறன் இடையேயான இந்த விவாதத்தால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

திமுக எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்து கோஷங்களை எழுப்பியபோது, ஓம் ​​பிர்லா தயாநிதி மாறனிடம் "உங்கள் பிரச்சனை என்ன?" என்று கேட்டார். "இது பாரதம், அதன் முதன்மை மொழி சமஸ்கிருதம். நாடாளுமன்றத்தில் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் உள்ளன. ஒரே நேரத்தில் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் விளக்கம் அளிக்கப்படும்" என்று விளக்கம் அளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+