ரூ.15 லட்சம் போடுறதா சொன்னீங்களே.. என்னாச்சு.. நாடாளுமன்றத்தை அதிர வைத்த திமுக எம்பி கிரிராஜன்
டெல்லி: வெளிநாடுகளில் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படுமென்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி என்னவாயிற்று? என பாஜக அரசுக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் இரா.கிரிராஜன் சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.
ஜி20 நாடுகளின் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த கையோடு தற்போது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை மத்திய அரசு நடத்தி வருகிறது. கடந்த 18ம் தேதி தொடங்கிய இந்த கூட்டத்தெடர் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்று பேசிய தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் இரா.கிரிராஜன், "தமிழ்நாட்டில் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் திராவிட முன்னேற்ற கழக அரசு நிறைவேற்றி வருகிறது.

அதில் ஒன்றான, மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியவிலேயே முன்மாதிரியாக விளங்கி கொண்டிருக்கிறார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக அரசு மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இந்தியாவிலே தமிழ்நாடு சிறந்த மாநிலமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் ஒன்றிய பாஜக அரசோ இதுவரை மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை . இது பா.ஜ.க அரசின் மிகப்பெரிய தேர்தல் ஜும்லாவாக உள்ளது.
வெளிநாட்டில் உள்ள பதுக்கி வைத்திருந்த கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படுமென்று பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு அளித்த வாக்குறுதி என்னவாயிற்று? அதேபோல அனைத்து நதிகளை இணைப்பதாக வாக்குறுதி அளித்தார். அதுவும் இதவரை நடக்கவில்லை. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். மாறாக விவாசாயிகளின் கடன் அதிகரித்து அவர்களின் தற்கொலைகள்தான் இரட்டிப்பாகியுள்ளது.
படித்த இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி புதிய வேலைகளை வழங்குவோம் என்ற ஒன்றிய பாஜக அரசின் வாக்குறுதி என்னவாயிற்று? தற்போது இந்தியாவில் வேலையில்லா பிரச்சனைத்தான் அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டு ஒன்றிய பாஜக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஜும்லாவாக உள்ளது" என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் இரா.கிரிராஜன் விமர்சித்துள்ளார்.
-
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications