தேசிய கொடி டிபி.. பிரதமர் மோடி கோரிக்கையை ஏற்ற திமுக எம்பி! அங்கதான் “டுவிஸ்ட்”
டெல்லி: இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை சமூக வலைதள கணக்குகளில் புரொபைல் படமாக வைக்க பிரதமர் மோடி விடுத்த கோரிக்கை ஏற்பதாக திமுக எம்.பி எம்.எம்.அப்துல்லா பேஸ்புக்கில் பதிவிட்டு அந்த படத்தையும் பகிர்ந்து இருக்கிறார்.
இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை மத்திய அரசு அமுத பெருவிழாவாக கொண்டாட தயாராகி வருகிறது. குறிப்பாக சுதந்திர தின விழாவுக்காக தேசியக்கொடி விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றங்களை செய்து இருக்கிறது.
கைத்தறி பருத்தி துணியால் மட்டுமே தேசிய கொடிகளை பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்த நிலையில், எந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டர், காட்டன், கம்பளி, பட்டு போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மன் கி பாத்
இதற்காக கடந்த ஆகஸ்டு 2 ஆம் தேதியில் இருந்து சுதந்திர தினமான ஆகஸ்டு 15 ஆம் தேதி வரை சமூக வலைதள கணக்குகளின் புரொபைல் படங்களில் தேசிய கொடியை வைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக கடந்த ஜூலை 31 ஆம் தேதி மன் கி பாத் வானொலி உரையில் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்த மன் கி பாத் உரை மிகவும் சிறப்புமிக்கது.

75 வது சுதந்திர தினம்
அதற்கு முக்கிய காரணம் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வது ஆண்டை நிறைவு செய்து இருக்கிறது. நான் வரலாற்று சிறப்புமிக்க தருணத்தின் ஆதாரங்களாக விளங்குகிறோம். நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை செய்த புரட்சியாளர்களுக்கு எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன். இந்திய சுதந்திரத்தின் அமுத பெருவிழா மக்கள் பேரியக்கமாக உருவெடுத்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

டிபி மாற்றிய பிரதமர்
ஆகஸ்டு 13 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 15 ஆம் தேதி தேதி வரை வீடுதோறும் தேசியக்கொடி ஏற்ற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இயக்கத்தில் பங்கேற்று நீங்களும் உங்கள் இல்லங்களில் தேசியக்கொடியை ஏற்றி பறக்க விடுங்கள். இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் என பலரும் தேசியக் கொடியை ட்விட்டர் கணக்கில் புரொபைல் படங்களாக வைத்துள்ளார்கள்.

திமுக எம்.பி. பதிவு
இது தொடர்பாக திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார். அதில், "75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்ய கோரியுள்ளார். அவரது கோரிக்கை ஏற்று இந்த படத்தை நான் பதிவிடுகிறேன் என மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ள அவர், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தேசியக் கொடியை தாங்கி நிற்கும் புகைபடத்தை பதிவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications