Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் ரவியை திரும்ப பெறுங்கள்! திமுக கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அனுமதி மறுப்பு.. எம்பிக்கள் அமளி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி, மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர திமுக நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் திமுக கொண்டு வர முயன்ற கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து லோக்சபாவில் திமுக எம்பிக்கள் முழக்கம் எழுப்பி வருகிறார்கள். ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெறக்கோரி திமுக எம்பிக்கள் தொடர் முழக்கம் எழுப்பி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஆளும் திமுக தரப்பிற்கும், ஆளுநர் ஆர். என் ரவிக்கும் இடையில் மோதல் அதிகரித்து வருகிறது. முக்கியமாக நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி திருப்பி அனுப்பியதில் இருந்து இந்த மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி


இந்த நீட் மசோதாவை தமிழ்நாடு அரசு மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து ஆளுநருக்கு அனுப்பி உள்ளது. இப்போது இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை. ஆனால் ஆளுநர் ஆர். என் ரவி இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதுதான் திமுகவை மேலும் கொதிப்பிற்கு உள்ளாக்கி உள்ளது.

பட்ஜெட்

பட்ஜெட்

சமீபத்தில் பட்ஜெட் பதில் உரையில் பேசிய போது கூட நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாம் நிறைவேற்றிய சட்டங்கள் ஆளுனரிடமோ அல்லது குடியரசுத் தலைவரிடமோ முடங்கி உள்ளது. இன்று வரை 19 நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் ஆளுநர், குடியரசுத் தலைவர் ஏற்காத காரணத்தால் முடங்கி உள்ளது. இது எப்படி ஜனநாயகம். இது நியாயம் ஆகும் என்று கடுமையாக ஆளுநரை விமர்சனம் செய்து இருந்தார்.

முரசொலி

முரசொலி

அதோடு திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியில் ஆளுநருக்கு எதிராக கடுமையான கட்டுரை ஒன்றும் வெளியிடப்பட்டு இருந்தது. அதில், ஆளுநர் ஆர். என் ரவி நீட் மசோதாவை இனியும் தாமதிப்பது தவறானதாக இருக்கும். அவரின் பதவிக்கு இது அழகு அல்ல. ஆளுநர் இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதை விட வேறு வழியில்லை. ஆனால் அதை மீறி அவர் மசோதாவை அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறார். இது சட்ட விதிகளுக்கு எதிரானது என்று கூறப்பட்டு இருந்தது.

ஆளுனர் ரவி

ஆளுனர் ரவி

இந்த நிலையில்தான் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என்று திமுக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்தார் எம்பி டி.ஆர்.பாலு. 3 சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஒப்புதலுக்காக அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்துகிறார் என்று இதில் டி.ஆர்.பாலு குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆனால் திமுக கொண்டு வர முயன்ற கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து லோக்சபாவில் திமுக எம்பிக்கள் முழக்கம் எழுப்பி வருகிறார்கள். ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்ப பெறக்கோரி திமுக எம்பிக்கள் தொடர் முழக்கம் எழுப்பி வருகிறார்கள்.

ஸ்டாலின் திமுக

ஸ்டாலின் திமுக

இதையடுத்து சபாநாயகர் திமுகவின் கோரிக்கையை ஏற்காத காரணத்தால் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக ஆளுநர் ரவியுடன் எங்களுக்கு உறவு நன்றாக உள்ளது. ஆனால் ஆளுநர் ரவி நாங்கள் அனுப்பும் சட்டங்கள் எதற்கும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பேசியது குறிப்பிடத்தக்கது. அதோடு நீட் மசோதாவை உடனே ஒப்புதல் அளிக்க வழி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

திமுக எம்.பி. வில்சன்

திமுக எம்.பி. வில்சன்

முன்னதாக மாநிலங்களையில் பேசிய திமுக எம்.பி. வில்சன் ஆளுநர்களின் அதிகாரத்திற்கு எதிராக மசோதா தாக்கல் செய்தார். அதில், மாநில சட்டமன்றங்களால் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது கவர்னர்கள் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவை திருத்த வேண்டும் என்று தனி உறுப்பினர் மசோதாவை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+