தனியார் ரயில் மக்களுக்கு எதிரானது.. கோவை-ஷீரடி ரயிலை அரசே இயக்கனும் -திமுக எம்.பி டி.ஆர்.பாலு கடிதம்
டெல்லி: கோவை - ஷீரடி இடையேயான பாரத் கௌரவ் தனியார் ரயிலை அரசே இயக்க வேண்டும் என்றும், இது மக்களுக்கும் பொதுத்துறைக்கும் எதிரானது எனவும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதி இருக்கிறார்.
மகாராஷ்டிராவில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் செல்ல 5 நகரங்களிலிருந்து பாரத் கௌரவ் என்ற திட்டத்தின் ரயில்களை இயக்க ரயில்வே துறை அனுமதி வழங்கியது.
அந்த வகையில் கோவையிலிருந்து ஷீரடி செல்லும் ரயில் கடந்த 14 ஆம் தேதி முதல் முறையாக இயக்கப்பட்டது. இதனை கோவையை சேர்ந்த எம்.என்.சி. பிராபர்டி டெவலப்பர்ஸ் என்ற தனியார் நிறுவனம் இயக்குகிறது.

திமுக ஏற்காது
இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எழுதி இருக்கும் கடிதத்தில். "கோவை வடக்கு ரயில் நிலையத்திலிருந்து ஷீரடி வரை பாரத் கௌரவ் ரயிலை தனியார் இயக்குவதற்கு அனுமதி அளிப்பதை திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், திமுக நீண்டகால மக்கள் நலன் கொள்கைக்கும், பொதுத்துறைக்கும் இது எதிரானது.

1,092 பயணிகள் செல்லலாம்
இந்த ரயில் சேவை என்பது முக்கியமான தொழில் நகரங்கள் மற்றும் ஆன்மீக தளங்களை இணைக்கிறது. ஆனால், இந்த ரயிலை தனியார் மூலம் இயக்குவது இந்திய ரயில்வேயின் நோக்கம் மற்றும் கடமையை தவறவிடும் செயல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த முக்கியமான ரயிலில் உள்ள 20 பெட்டிகளில் 1,092 பயணிகள் செல்ல முடியும்.

இந்தியன் ரயில்வே நடத்த வேண்டும்
இதனை இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே எடுத்து நடத்த வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக மக்கள் நலனில் அதிக மரியாதை வைக்காத மத்திய அரசு, தனியாரை நம்பி முக்கியமான ரயில் சேவையை ஒப்படைத்து இருப்பதை திமுக கடுமையாக எதிர்க்கிறது. இந்த தனியார்மயமாக்கலின் விளைவாக கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

முடிவை கைவிட வேண்டும்
இதனால் தனியாருக்கு மட்டுமே லாபம். எனவே மத்திய அரசு கோவை - ஷீரடி இடையே இயக்கப்படும் ரயிலை தனியாருக்கு வழங்கிய முடிவை மறுபரிசீலனை செய்து அதை திரும்பப்பெற வேண்டும். இந்திய ரயில்வேயின் மீது நம்பிக்கை வைத்து இதை அரசே எடுத்து நடத்தி தமிழ்நாடு மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும்." என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications