திடீரென "உள்ளே" இழுக்கப்பட்ட திமுக..கோர்ட்டில் ஏற்பட்ட பரபரப்பு..கொந்தளித்த ஓபிஎஸ் தரப்பு.. ட்விஸ்ட்
டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று தேவையின்றி திமுகவை இழுத்து வாதங்கள் வைக்கப்பட்டன. இதனால் கோர்ட்டில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுக்குழு வழக்கு தீவிரமாக நடந்து வருகிறது. பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு, எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைக்க உள்ளனர். பிற்பகல் 12 மணிக்கே வழக்கு விசாரணை தொடங்க உள்ளது.
மாலை வரை வழக்கு விசாரணை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றோடு வழங்கில் விசாரணை முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைரமுத்து இன்று வாதம் வைத்து வந்தார். சுமார் ஒன்றரை மணி நேரமாக அவர் வாதம் வைத்துக்கொண்டு இருந்தார். அதில் அவர் மூன்று முக்கியமான பாயிண்டுகளை வைத்தார். முதல் பாயிண்ட் - அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தனக்கு ஏற்றபடி விதிகளை மாற்றிக்கொண்டார். அதிமுகவில் பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கு கட்சியில் 10 வருடங்கள் இருக்க வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இருக்க வேண்டும் என்று விதிகளை மாற்றி உள்ளார். எடப்பாடி முழுக்க முழுக்க தான் மட்டுமே பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்று எடப்பாடி இப்படி செய்து இருக்கிறார்.

விதி மாற்றம்
பாயிண்ட் 2 - எடப்பாடி கட்சியின் விதிகளை மாற்றியதே தவறு. எம்ஜிஆர் எதற்காக கட்சியில் தொண்டர்கள் மூலம் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறினாரோ அந்த விதிகளை எடப்பாடி மாற்றி கட்சியின் அடிப்படைக்கு எதிராக சென்று இருக்கிறார். குறுக்கு வழியில் வந்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்செயலாளர் பதவி. அதற்கு என்று இருந்த விதிகளை எல்லாம் எடப்பாடி தூக்கி எறிந்து விட்டார். விதிகளை மாற்றிவிட்டு தற்போது இடைக்கால பொதுச்செயலாளர் என்று எடப்பாடி கூறுகிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் பதவியை "குறுக்கு வழியில்" எடப்பாடி பழனிச்சாமி பெற முயல்கிறார்.

வழக்கு
பாயிண்ட் 3 - அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட வேண்டும். இப்படி சொல்வது அதிமுகவின் விதி 42. இந்த விதிப்படி கட்சியில் என்ன நடக்க வேண்டும் என்றாலும் இருவரும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும். அதாவது கட்சியில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் படிவத்தில் இரண்டு பேரும் ஒன்றாக கையெழுத்து போட வேண்டும். கட்சி நிதி சார்ந்த விவாகரங்களில் ஒன்றாக கையெழுத்து போட வேண்டும். கட்சி கணக்கு வழக்குகளில் ஒன்றாக கையெழுத்து போட வேண்டும். கட்சியில் இருந்து ஒருவரை நீக்க வேண்டும் என்றால் அதில் இவர்கள் ஒன்றாக கையெழுத்து போட வேண்டும். இருவரும் ஒருமித்த குரலில் செயல்பட வேண்டும். ஆனால் அதில் ஒருங்கிணைப்பாளரை இவர்கள் கட்சியில் இருந்தே நீக்கி உள்ளனர். அந்த பதவிகளையும் நீக்கி உள்ளனர் என்று வைரமுத்து தரப்பு வாதம் வைத்தது, என்று மூன்று முக்கியமான வாதங்களை வைரமுத்து வைத்தார்.

நீக்கம் ஏன்?
இதையடுத்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது ஏன் என்று எடப்பாடி தரப்பு உள்ளே புகுந்து வாதம் வைத்தது. அப்போது, ஓபிஎஸ் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டார். அவர் திமுகவுடன் கூட்டு வைத்து இருந்தார். அதனால் அவர் நீக்கப்பட்டார் என்று கூறினார். இதற்கு குறுக்கிட்ட நீதிபதிகள்.. எடப்பாடி தரப்பு அவர்களின் நேரத்தில் இந்த வாதத்தை வைக்க வேண்டும். இப்போது வாதம் வைக்க கூடாது. நீங்கள் பின்னர் பேசலாம் என்று கூறினர். இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பதில் அளித்து வாதத்தை தொடர்ந்த வைரமுத்து தரப்பு, திமுகவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் செயல்பட்டார் என்பதற்கு ஏதாவது ஆதரவு இருக்கிறதா? இதை காரணம் காட்டி எடப்பாடியை நீக்கி உள்ளனர். அதற்கு என்ன ஆதாரம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உட்கட்சி தேர்தலை அங்கீகரித்து உள்ளது, என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு வாதம் வைத்துள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications