ஆறு மாதங்களில் ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி வழங்க வேண்டாம் - இந்திய தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் ஓய்வுபெறவிருக்கும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகளை கொடுக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
டெல்லி: தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அவர்களது சொந்த மாவட்டங்களில் பணியாற்ற கூடாது என்றும் முந்தைய தேர்தல்களில் ஒழுங்கீன செயல்களில் சிக்கிய அதிகாரிகளை தேர்தல் பணிகளில் நியமிக்க வேண்டாம் என்றும் தமிழக தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். மார்ச் மாதத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்யும் வேலைகளை தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது.

சின்னம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் அதற்கான ஒதுக்கீடுகளை இந்திய தேர்தல் ஆணையம் முன்கூட்டியே செய்யத் தொடங்கிவிட்டது. தமிழக தேர்தல் ஆணையமும் வாக்குச்சாவடிகள், வாக்குப்பட்டியல் மற்றும் இயந்திரங்களை தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் தமிழகத்தில் ஓய்வுபெறவிருக்கும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகளை கொடுக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அவர்களது சொந்த மாவட்டங்களில் பணியாற்ற கூடாது என்றும் முந்தைய தேர்தல்களில் ஒழுங்கீன செயல்களில் சிக்கிய அதிகாரிகளை தேர்தல் பணிகளில் நியமிக்க வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலில் நடைபெறும் குழப்பங்களை தவிர்க்க தேர்தல் ஆணையம் இந்த கடிதத்தை எழுதியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications