இந்தியாவில் 'பூஸ்டர்' டோஸ் கட்டாயம் போட வேண்டுமா? இப்போது என்ன நிலை.. வல்லுநர்கள் சொல்வது என்ன
டெல்லி: சீனாவில் இப்போது கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா குறித்த அச்சம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே பூஸ்டர் டோஸ் குறித்து வல்லுநர்கள் கூறுவதைக் கேட்கலாம்.
உலகில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நம்மை வைத்த செய்தது கொரோனா வைரஸ் தான். இப்போது தான் இந்த கொரோனா பாதிப்பு ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்ததது. உலகம் மெல்ல இப்போது தான் இயல்பு நிலைக்குத் திரும்பி வந்தது.
உலகின் பெரும்பாலான நாடுகளில் வேக்சின் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பகுதி மக்களுக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா குறித்து விதிக்கப்பட்ட பெரும்பாலான கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

சீனா
இந்தச் சூழலில் தான் சீனாவில் திடீரென கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சீனாவில் இத்தனை காலம் மிகவும் ஸ்ட்ரிக்ட்டான ஜீரோ கோவிட் பாலிசி கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதாவது ஒருவருக்கு கொரோனா வந்தாலே, அப்பகுதி முழுக்க லாக்டவுன் பிறப்பிக்கப்படும். தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மக்கள் எதிர்ப்பு அதிகரிக்கவே, போராட்டங்களும் நாடு முழுவதும் கிளம்பின. இதனால் வேறு வழியில்லாமல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.

உருமாறிய கொரோனா
இதனால் சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், அங்கு புதிய உருமாறிய கொரோனாவும் கண்டறியப்பட்டுள்ளது.. இது இந்தியாவிலும் ஓரிருவருக்குக் கண்டறியப்பட்டது. இதனால் உலகெங்கும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டுப் பயணிகளில் அறிகுறி இருப்பின் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாஸ்க்
அரசு சார்பில் இதுபோன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும் கூட பொதுமக்களும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா உச்சத்தில் இருந்த போது, பெரும்பாலானோர் மாஸ்க் அணிந்து வந்தனர். இந்நிலையில், இப்போது மாஸ்க் அணியும் பழக்கம் கணிசமாகக் குறைந்துள்ளது. மத்திய அரசு தொடர்ச்சியாக இது குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பு குறைந்ததும், நம்மில் பெரும்பாலானோர் மாஸ்க் பழக்கங்களையும் கைவிட்டு விட்டோம்.

இந்தியா
இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டதால் வைரஸ் பாதிப்பு முழுமையாக இல்லை என்று சொல்லிவிட முடியாது. இந்தியாவில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும், அது மிக குறைவாகும் தீவிரமற்றதுமாகவே இருந்து வருகிறது. இன்று வியாழக்கிழமை காலை அரசு வெளியிட்ட தரவுகளின்படி 3402 பேர் மட்டுமே நாட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாகக் கேரளாவில் 1438 பேரும் கர்நாடகாவில் 1263 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர். பெரும்பாலும், இப்போது வைரஸ் சோதனை குறைவாகவே எடுக்கப்படுகிறது. இதனால்தான் வைரஸ் உறுதியாவதும் மிகக் குறைவாக உள்ளது.

கொரோனா வேக்சின்
தடுப்பூசிகளைப் பொறுத்தவரை மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் வேக்சின் பணிகள் சிறப்பாகவே நடந்துள்ளது. இதுவரை நாட்டில் 220 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளது. 102 கோடி பேருக்கு முதல் டோஸ் வேக்சினும் 95 கோடி பேருக்கு இரண்டாவது டோஸ் வேக்சினும் போடப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்ட பெரும்பாலானோருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே வேக்சின் பாதிப்பு குறைந்து, கொரோனா உயிரிழப்புகள் கிட்டத்தட்ட இல்லாமல் இருக்க இதுவே முக்கிய காரணம்.

முன்னெச்சரிக்கை டோஸ்
அதேநேரம் முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் 3ஆவது பூஸ்டர் டோஸை அதிகப்படியானோர் எடுத்துக் கொள்ளவில்லை. இந்தியாவில் முதல் இரண்டு டோஸை மக்கள் ஆர்வமுடன் போட்டனர். இருப்பினும், அதற்குள் வைரஸ் பாதிப்பு குறைந்துவிட்டதால் மூன்றாவது டோஸை அதிகப்படியானோர் போட ஆர்வம் காட்டவில்லை. இந்தியாவில் இதுவரை 22 கோடி பேர் மட்டுமே இந்த பூஸ்டர் டோஸ் போட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வேக்சின் தடுப்பாற்றல் குறைந்துவிடும் என்பதை வல்லுநர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

நிதி ஆயோக் விகே பால்
இது குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் விகே பால் கூறுகையில், "இந்தியாவில் 28% பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் எனப்படும் முன்னெச்சரிக்கை டோஸ் எடுத்துள்ளனர். இதனால் அனைவரும் குறிப்பாக மூத்த குடிமக்கள், முன்னெச்சரிக்கை டோஸை எடுத்துக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக அரசும் தேவையான அறிவுரைகளை வெளியிட்டுள்ளன. நீங்கள் நெரிசலான இடத்தில் இருக்கும் போது மாஸ்க் அணிய வேண்டும். குறிப்பாகப் பிற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு மாஸ்க் அணிய வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

பூஸ்டர் டோஸ்
இதன் காரணமாகவே பெரும்பாலான வல்லரசு நாடுகள் பூஸ்டர் டோஸ் பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதைக் கடந்தோர் வேக்சினை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் போட விரும்புவோர் வழக்கம் போல, கோவின் தளத்தில் வேக்சின் போட ரிஜிஸ்டர் செய்து வேக்சின் போட்டுக் கொள்ளலாம். இருப்பினும், இரண்டாம் டோஸ் போட்டு 6 மாதங்கள் கழித்து இந்த பூஸ்டர் டோஸை போட்டுக் கொள்ளலாம். நீங்கள் 2ஆவது டோஸ் போட்டு, 6 மாதங்களில் வெளிநாட்டிற்குச் செல்ல விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் செல்லும் நாட்டில் பூஸ்டர் டோஸ் தேவையென்றால் மூன்று மாத இடைவெளியில் பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ளலாம்.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications