மர்மங்கள் நிறைந்த எவரெஸ்ட் சிகரம்! இரவில் கேட்கும் பயங்கர சப்தம்! விஞ்ஞானிகள் சொன்ன ஆச்சரிய காரணம்
டெல்லி: உலகின் உயரமான எவரெஸ்ட் மலையில் பனி நிறைய சிகரங்கள் இரவு நேரத்தில் பயங்கர ஒலி எழுப்புகிறதாமே தெரியுமா உங்களுக்கு?
உலகிலேயே மிக உயரமான சிகரம் மவுண்ட் எவரெஸ்ட் என பள்ளி காலத்திலிருந்தே படித்து வருகிறோம். இந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி பலர் அவரவர் நாட்டு தேசியக் கொடிகளை நட்டுள்ளனர். ஆனால் இந்த சிகரத்தில் ஏறுவது என்பது கடினமானது. பொதுவாகவே மலை பகுதிகளில் ஏறுவது சவாலானதாக இருக்கிறது.

இதற்காகவே மலையேற்ற பயிற்சிகளை மேற்கொண்டு இது போல் சிகரங்களில் ஏறுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் ஏற முடியாமல் திரும்பி செல்கிறார்கள். சிலர் ஏறி வெற்றிக் கொடியை பறக்க விடுகிறார்கள். மேலும் இந்த எவரெஸ்ட் சிகரம் குறித்து நீங்கள் ஆயிரம் கதைகளை கேட்டுள்ளீர்கள்.
ஆனால் இந்த சிகரங்கள் இரவு நேரத்தில் மிகவும் பயங்கரமான சப்தங்களை எழுப்புகின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அந்த சப்தம் 100 கி.மீருக்கு அப்பால் வரை கேட்கிறதாம். இதனால் அந்த பகுதியில் நிம்மதியாக தூங்கவே முடியவில்லை என்கிறார்கள் மலையேற்ற வீரர்கள். எவரெஸ்ட் மலையில் 15 முறை ஏறி சாதனை படைத்த டேவ் ஹான்தான் இது போல் இரவு நேரங்களில் தூங்க முடியாத அளவுக்கு பயங்கர சப்தம் கேட்பதாக அவர்தான் முதல்முறையாக தெரிவித்தார்.
அது போல் பனிப்பாறைகள் பள்ளத்தாக்கு பகுதிகளில் விழுவதாகவும் தெரிவித்திருந்தார். எனவே பனி சிகரத்தில் ஏன் பயங்கர சப்தம் வருகிறது என்பதை அறிய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வெளியிட்ட தகவல் ஆச்சரியத்தை அளிக்கிறது. விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வுகளின்படி, இமயமலை பகுதியில் சூரியன் மறையும் போது வெப்பநிலை வேகமாக குறையும். இதன் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தை சுற்றியுள்ள பனிச்சிகரங்களில் சப்தம் ஏற்படும்.
உயரமான பனிச்சிகரங்கள் உடைய தொடங்கும். அப்போதுதான் இது போன்ற பயங்கரமான சப்தம் கேட்கும். பனி சிகரத்தில் ஐஸ் உடையும் போது அந்த சப்தம் மிகவும் அச்சுறுத்துவதாக இருக்கும். ஆனால் இது அந்த பகுதியில் உள்ள உயர்ந்த மலை பகுதிகளில் மட்டுமே இந்த சப்தம் கேட்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. பனிப்பாறை நிபுணர் எவ்ஜெனி பொடோல்ஸ்கி தலைமையிலான விஞ்ஞானிகள் குழு 2018 இல் பனிப்பாறையின் நில அதிர்வு செயல்பாட்டை ஆய்வு செய்தது.
3 வாரங்கள் விஞ்ஞானிகள் இந்த இமயமலை பகுதியில் நடுங்கிக் கொண்டிருந்தனர். அங்கு நடந்த மாற்றங்களை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தனர். அத்தோடு அந்த பயங்கரமான சப்தத்தை பதிவு செய்தனர் என்றார். அது போல் ஜப்பானின் ஆராய்ச்சியாளர் டாக்டர் பொடோல்ஸ்கி, நாங்கள் சுமார் 29 ஆயிரம் அடி உயரத்தில் இருந்ததால் இது ஒரு அற்புதமான அனுபவம்.
நாங்கள் எவரெஸ்ட் சிகரத்தில் வாழ்ந்தோம். அங்கு சாப்பிட்டோம். இரவில் அங்கு வெப்பநிலை சுமார் மைனஸ் 15 டிகிரி சென்டிகிரேட் அல்லது 5 டிகிரி பாரன்ஹீட் வரை குறைந்ததும் உச்சியில் இருந்து பயங்கரமான சப்தம் கேட்டது, அதே போல் பனிப்பாறையில் விரிசல் ஏற்பட்டதை நாங்கள் கண்டோம். பனிப்பாறைக்குள் ஆழமான அதிர்வுகளை அளவிடுவதற்காக நாங்கள் பனியின் மீது சென்சார்களை வைத்து தகவல்கள் பெற்றோம் என்றார்.












Click it and Unblock the Notifications