உள்ளே வரும் QR டெக்னாலஜி.. மொத்தமாக மாறும் ஆதார்.. நீங்க நினைச்சு கூட பார்க்காத மாற்றங்கள்
டெல்லி: ஆதார் அட்டையில் விரைவில் பெரிய மாற்றம் வரவுள்ளது.. இதன் மூலம் ஆதார் அட்டையின் நகலைச் சமர்ப்பிக்கும் தேவை இருக்காது. மேலும், க்யூஆர் (QR) கோடு அடிப்படையிலான புதிய செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், ஆதார் அட்டையை நாம் எளிதாகப் பகிர முடியும்.
பொதுமக்கள் ஆதார் மையங்களுக்குச் சென்று தங்கள் தகவல்களை அப்டேட் செய்வதைக் குறைக்கும் வகையில் ஆதார் அமைப்பு புதிய நடைமுறையைக் கொண்டு வரவுள்ளது. வரும் நவம்பர் மாதத்திற்குள் இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

ஆதாரில் வரும் மாற்றம்
பயோமெட்ரிக் பதிவுகள் தவிர, முகவரி மற்றும் பிற தகவல்களைப் புதுப்பிக்கும் முறை எளிமையாக்கப்பட உள்ளது. பிறப்புச் சான்றிதழ்கள், மெட்ரிகுலேஷன் பதிவுகள், ஓட்டுநர் உரிமங்கள், பாஸ்போர்ட்டுகள், பான் கார்டுகள், பிடிஎஸ் மற்றும் எம்.என்.ஆர்.ஈ.ஜி.ஏ (MNREGA) அமைப்புகள் போன்ற பல்வேறு அதிகாரப்பூர்வ தரவுகள் இருக்கும் தளங்களுடன் ஆதார் தளம் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.
மோசடிகளைத் தடுக்கலாம்
இதன் மூலம் பொதுமக்கள் எளிதாகச் சேவையைப் பெறலாம். மேலும், மோசடி ஆவணங்கள் மூலம் ஆதார் கார்டுகளை பெறும் தடுக்கப்படும். மேலும், பயனர்களின் வசதிக்காக மின்சாரக் கட்டணப் பதிவுகளையும் இதில் இணைப்பது குறித்தும் ஆலோசனை நடந்து வருகின்றன.
புதிய செயலி
இது குறித்து ஆதார் தலைமை நிர்வாக அதிகாரி புவனேஸ் குமார் கூறுகையில், "நாங்கள் புதிய செயலி ஒன்றை உருவாக்கி வருகிறோம். இதன் மூலம் விரைவில் கைரேகை மற்றும் கருவிழிப் பதிவு தவிர, மற்ற எல்லாவற்றையும் வீட்டில் இருந்தபடியே செய்ய முடியும்" என்று அவர் கூறினார்.
வசதிகள் என்ன
- இந்த செயலி மூலமாகவே பயனர்கள் முகவரிகள், தொலைப்பேசி எண்கள், பெயர்கள் மற்றும் தவறான பிறந்த தேதி திருத்தங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை அப்டேட் செய்ய முடியும்.
- QR கோடு மூலம் ஆதார் தகவல்களை அனுப்பும் வசதி கொண்டு வரப்படும். இது ஆதார் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும். ஹோட்டல் செக்-இன் முதல் ரயில் பயணத்தின்போது அடையாளச் சரிபார்ப்பு வரை பல இடங்களில் பயன்படும். க்யூ.ஆர் ஆப்ஷன் இருப்பதால் ஒருவரின் சம்மதத்துடன் மட்டுமே ஆதார் கார்டை பகிர முடியும்.
- சொத்து பதிவு நடைமுறைகளின்போது மோசடியைத் தடுக்க, சொத்துக்களைப் பதிவு செய்யும் நபர்களின் ஆதார் சரிபார்ப்பை இணைக்கவும் மாநில அரசுகளுடன் ஆதார் அமைப்பு இணைந்து செயல்பட்டு வருகிறது.
- குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் மற்றும் பிற தரவு அப்டேட்களைச் செய்ய, சிபிஎஸ்இ (CBSE) மற்றும் பிற தேர்வு வாரியங்களுடன் ஆதார் அமைப்பு ஆலோசனையைத் தொடங்கியுள்ளது. ஐந்து முதல் ஏழு வயதுக்குள்ளும், 15 முதல் 17 வயதுக்குள்ளும் இந்த அப்டேட்களை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் அப்டேட்டில் (ஐந்து முதல் ஏழு வயது குழந்தைகள்) எட்டு கோடி குழந்தைகளுக்கும், இரண்டாவது அப்டேட்டில் (15 முதல் 17 வயதுக் குழந்தைகள்) 10 கோடி குழந்தைகளுக்கும் பயோமெட்ரிக் டேட்டா நிலுவையில் உள்ளன. இந்த அப்டேட்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
- பாதுகாப்பு முகமைகள் மற்றும் ஹோட்டல் போன்ற பல்வேறு அமைப்புகளுடன் UIDAI இணைந்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆதார் பயன்பாடு கட்டாயமில்லாத இடங்களில் கூட, அதன் சேவைகளை விரிவுபடுத்த முடியும்.
-
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35












Click it and Unblock the Notifications