மத பிரிவினை! 6 வருடம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை! அன்று பால் தாக்கரேவுக்கு நடந்தது தெரியுமா
டெல்லி; லோக்சபா தேர்தலில் மத ரீதியான பிரச்சாரங்களை அனுமதிக்க கூடாது, தேர்தல் ஆணையம் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வரும் நிலையில்தான் 1980 களில் சிவசேனா நிறுவன தலைவர் பால் தாக்கரேவிற்கு 6 வருடம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது
1987 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு நடந்த இடைத்தேர்தலின் போது சிவசேனா வேட்பாளரான டாக்டர் ரமேஷ் பிரபுவுக்காக பிரச்சாரம் செய்த பால் தாக்கரே, முஸ்லிம் பெயர்களைப் பயன்படுத்தி கடுமையான விமர்சனம் வைத்தார்.

இஸ்லாமியர்களுக்கு வாக்களிக்காதீர்கள்.. சக இந்துவுக்கு வாக்களியுங்கள் என்று இந்துக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அவர் கூறியிருப்பதாவது, "வெற்றி என்னுடையதாகவோ அல்லது சிவசேனா அல்லது டாக்டர் பிரபுவினுடையதாகவோ இருக்காது. இது இந்து மதத்தின் வெற்றியாக இருக்கும், இந்த வெற்றிக்கு நீங்கள் உறுதுணையாக இருப்பீர்கள், நீங்கள் இருக்க வேண்டும்.
எங்கே மசூதிகள் இருக்கிறதோ, அதையே தோண்டத் தொடங்கினால், இந்துக் கோயில்களைக் காணலாம். நம் இந்து மதத்தின் பெயரால் தேர்தலில் போட்டியிடும் பிரபு என்ற நபரை சட்டசபைக்கு அனுப்பியிருக்க வேண்டும். அதுவே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும், என்று பிரச்சாரம் செய்தார்.
இதற்குப் பிறகு, குண்டே என்ற காங்கிரஸ் வேட்பாளர் தாக்கரே மற்றும் பிரபு இருவருக்கும் எதிராக தேர்தல் விதிமுறையான ஆர்பிஏவை மீறியதாக கூறி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஏப்ரல் 1989 இல், நீதிமன்றம் இந்த மனுவை உறுதிசெய்தது அதோடு பிரபுவின் தேர்தல் வெற்றியை ரத்து செய்தது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, RPA இன் பிரிவு 123 ஐ மீறியதற்காக அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அதோடு தேர்தல் ஆணையம் இந்த வழக்கில் பால் தாக்கரேவிற்கு 6 ஆண்டுகள் பிரச்சாரம் செய்வதில் இருந்து தடை விதித்தது. இதன்பின் பால் தாக்கரே பெரிதாக பிரச்சாரத்தில் ஈடுபடுவதையே தவிர்த்தார்.
தேர்தல் ஆணைய விதி: ECI இன் மாதிரி நடத்தை விதியின் (MCC) முதல் பத்தியில், "எந்தவொரு கட்சியும் அல்லது வேட்பாளரும் தற்போது மக்கள் இடையே உள்ள வேறுபாடுகளை மோசமாக்கும் அல்லது பரஸ்பர வெறுப்பை உண்டாக்கும் அல்லது மத அல்லது மொழி சார்ந்த குழுக்கள், பல்வேறு சாதிகள் மற்றும் சமூகங்களுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது. அதை பயன்படுத்தி பிரச்சாரம் செய்ய கூடாது" என்று கூறுகிறது.
லோக்சபா தேர்தலில் மத ரீதியான பிரச்சாரங்களை அனுமதிக்க கூடாது, தேர்தல் ஆணையம் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வரும் நிலையில்தான் பால் தாக்கரேவிற்கு 6 வருடம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது
மோடி பேச்சு: ராஜஸ்தானில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசியது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள்.
இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. "அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது,தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.
எழுந்த சர்ச்சை; இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா. இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள்.
பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மங்களத்தை கூட விட்டுவைக்காது, என்று பிரதமர் மோடி கடுமையாக பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications