ரயில் டிக்கெட்கள் விலை கவுண்டரில் குறைவு.. ஆன்லைனில் அதிகம்! ரேட் எவ்வளவு அதிகம்! இதற்கு என்ன காரணம்
டெல்லி: ரயில் டிக்கெட்களை புக் செய்யும் போது ஆன்லைன் அல்லது கவுண்டர் என இரண்டில் எப்படி புக் செய்தாலும் ஒரு கட்டணமே இருக்கும் என்றே இத்தனை நாள் நாம் நினைத்திருப்போம். ஆனால், உண்மையில் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் போது அதன் ரேட் அதிகமாக இருக்கும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான காரணங்களையும் அவர் விளக்கியுள்ளார்.
நமது நாட்டில் பொது போக்குவரத்து உள்கட்டமைப்பில் ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான இடங்களில் ரயில் ரூட்கள் உள்ளன. மேலும், டிக்கெட் விலையும் குறைவு என்பதால் பலரும் ரயில்களில் பயணிக்கவே விரும்புகிறார்கள்.

ரயில் டிக்கெட்களை பயணிகள் எளிதாக வாங்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது நாம் பல்வேறு வழிகளில் நாம் ரயில் டிக்கெட்களை வாங்கலாம் என்ற போதிலும் பெரும்பாலானோர் நேடியாகக் கவுண்டரிலும் ஆன்லைனிலும் தான் டிக்கெட்களை வாங்குகிறார்கள்.
ஆன்லைன் டிக்கெட்
கவுண்டருக்கு சென்று வாங்கினாலும் ஆண்லைனில் வாங்கினாலும் ஒரே ரேட் தான் நாம் தருவோம் என்று நினைத்து இப்போது பலரும் ஆன்லைனில் டிக்கெட் வாங்குகிறார்கள். ஆனால், உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் கவுண்டரில் வாங்கும் டிக்கெட்களை விட ஆன்லைனில் வாங்கும் டிக்கெட் விலை அதிகமாம். இதைச் சொல்வது வேறு யாரும் இல்லை.. மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவே இதை உறுதி செய்துள்ளார்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஆன்லைனில் டிக்கெட்கள் அதிகம் எனக் குறிப்பிடுகிறார். மேலும், அதற்கான காரணங்களையும் அவர் விளக்கியுள்ளார். அதாவது ஆன்லைனில் எடுக்கப்பட்டும் இ-டிக்கெட்டுகளுக்கு ஐஆர்சிடிசி தனியாகக் கட்டணங்கள் (convenience fees) விதிக்கிறது. அதுவே விலை அதிகமாக இருக்க முக்கிய காரணமாக உள்ளது.
அதிகம் ஏன்
தனது ஆன்லைன் டிக்கெட் உள்கட்டமைப்பைப் பராமரிப்பது, மேம்படுத்துவது மற்றும் விரிவுபடுத்துவது ஆகியவற்றுக்கு இந்த கட்டணங்களை ஐஆர்சிடிசி தளம் வசூலிக்கிறதாம். அதன்படி தற்போது ஏசி வசதி இல்லாத பெட்டிகளுக்கு 15 ரூபாயும் ஏசி வசதி கொண்ட பெட்டிகளுக்கு 30 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
இது தவிர ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது நாம் எப்படி கட்டணம் செலுத்துகிறோம் என்பதைப் பொறுத்து பேமெண்ட் கேட்வே சார்ஜும் தனியாக வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், நெட் பேங்கிங், யுபிஐ அல்லது டிஜிட்டல் வாலட்கள் என நாம் எதைத் தேர்வு செய்கிறோமோ அதைப் பொறுத்து இந்த கட்டணம் மாறுபடுகிறது. இந்த கேட்வே சார்ஜ் என்பது சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களால் விதிக்கப்படுவதாகவும் அவை ஐஆர்சிடிசியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்காது என்றும் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
எதில் குறைவு
பொதுவாக யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தும் போது தனியாக கேட்வே சார்ஜ் இருப்பதில்லை. ரூபே கார்ட் பயன்படுத்தும் போதும் கேட்வே சார்ஜ் இருக்காது. அடுத்து டெபிட் கார்டுகள், நெட் பேங்கிங்களுக்கு சற்று குறைவாகவும் கிரெடிட் கார்டு மற்றும் டிஜிட்டல் வாலட்களுக்கு கட்டணங்கள் அதிகமாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஆர்சிடிசி
ஐஆர்சிடிசி மூலம் நிர்வகிக்கப்படும் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வசதி என்பது கடந்த 2022ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ரிசர்வ் செய்யப்படும் டிக்கெட்களில் சுமார் 80% ஆன்லைன் மூலமாகவே புக் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆன்லைனுக்கு கூடுதல் கட்டணம் இருந்தாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் புக் செய்யலாம்.. கவுண்டர்கள் கூட்டங்களைத் தவிர்க்கலாம் உள்ளிட்ட காரணங்களால் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வதையே மக்கள் விரும்புகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications