Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கங்கை நதி நீர் மட்டம் வரலாறு காணாத சரிவு.. வாரணாசியில் வற்றிப்போனது ஏன்.. அதிர்ந்த விஞ்ஞானிகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கங்கை நதியின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவு குறைந்துள்ளது. வாரணாசியில் இருக்கும் கங்கை ஆற்றின் அகலம் 30-35 மீட்டராக குறைந்துள்ளது. புனித நீராட வரும் பக்தர்கள் அதிர வைத்துள்ள இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்

இமய மலையில் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கும் பாகிரதி நதியானது, தேவப்பிரயாக் எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாக மாறுகிறது. அதாவது கங்கை நதி இமயலையில் கங்கோத்ரியில் உள்ள பனிப்பாறையில் தொடங்குகிறது.

Varanasi Gangai

இந்த நதி உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் ரிஷிகேஷ், ஹரித்வார், கான்பூர்,அலகாபாத், வாரணாசி, பாட்னா போன்ற நகரங்கள் வழியாக பாய்ந்தோடுகிறது. கடைசியாக உலகின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடுகளில் ஒன்றான சுந்தரவனக் காடு என்று அழைக்கப்படும் இந்திய வங்கசேதம் இடையிலான டெல்டா பகுதியை வளமாக்கிவிட்டு இறுதியாக கொல்கத்தாவில் உள்ள வங்கக்கடலில் கலக்கிறது.

இந்தியாவில் இந்த நதி கங்கை என்ற பெயரிலும், வங்க தேசத்தில் பத்மா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. வங்கதேசம் முழுவதும் திருச்சி டெல்டா போல் சமவெளி பகுதியில் கங்கை பாய்வதால் அந்த பகுதியை செல்வ செழிப்பாக மாற்றி உள்ளது கங்கை.. கங்கை நதிதான் வடக்கில் உத்தரகாண்ட் தொடங்கி உத்தரப்பிரதேசம், பீகார் வழியாக கடைசியில் உள்ள மேற்கு வங்காளம் வரை உள்ள மக்களுக்கு ஜீவ நதியாகும். மொத்தம் 2525 கி.மீ வரை ஓடுகிறது.

நாட்டில் உள்ள புனித நதிகளில் முதன்மையான நதியான கங்கை உருவாகும் கங்கோத்ரி என்ற இடத்தின் பனிப்பாறையின் அளவு என்பது 27 கன கிலோமீட்டருக்கும் அதிகமாக இருக்கும். இந்த பனிப்பாறை சுமார் 30 கிலோமீட்டர் நீளமும் 2 முதல் 4 கிமீ அகலமும் கொண்டதாகும். இந்த நதி பனிப்பாறையில் இருந்து உருவாவதுடன், யமுனை உள்பட பல்வேறு ஆறுகள் கலப்பது போன்ற காரணங்களால் இந்த நதி வற்றவே வற்றாத ஜீவநதியாகும்.

இந்த கங்கை சிவனின் திருத்தலமான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், அதாவது காசியை கடந்து ஓடுகிறது. காசியில் உள்ள கங்கையின் நீராடினால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம் ஆகும். இதன் காரணமாக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கங்கைக்கு வந்து நீராடிச் செல்வது வழக்கம்.

தெற்கே ராமேஸ்வரம் எப்படியோ வடக்கே காசியும் அதன் கங்கை நதிக்கரையும் புனித தலம் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். இதன் காரணமாக ஆண்டு முழுவதும் கங்கை நதிக்கரையில் எப்போதும் கூட்டம் அலைமோதுவது வழக்கம். கங்கை எப்போதுமே இங்கு வற்றிப்போனதும் இல்லை.. தண்ணீர் வந்து கொண்டே தான் இருக்கும்.

இந்நிலையில், இந்த ஆண்டு வரலாறு காணாத வெப்பம் காரணமாக கங்கை ஆற்றில் நீர் வரத்து பெருமளவு குறைந்துள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் வரலாறு காணாத வெயில் கொளுத்தி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் மட்டுமல்ல டெல்லியிலும் வெயில் கடுமையாக உள்ளது. இந்த கடும் வெப்பத்தால், கங்கை நதியின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவு குறைந்திருக்கிறது.

வழக்கமாக ஜூன் மாதத்தில் 70 முதல் 80 மீட்டர் வரை இருக்கும் கங்கை ஆற்றின் அகலம் இருக்கும். ஆனால்கங்கை ஆற்றின் அகலம் என்பது வெறும் 30 முதல் 35 மீட்டராக குறைந்துள்ளது. கங்கை ஆற்றில் நீர்மட்டம் குறைந்து வருவதால், கரையோரத்தில் தண்ணீரில் மூழ்கிக் கிடந்த உடைந்த படகுகள், குப்பைகள், பாறைகள் அதிகமாக வெளியே தெரிகிறது. மேட்டூர் அணை வற்றிப்போனால் எப்படி இருக்குமோ அதுபோல் கங்கை நதி தண்ணீர் குறைந்து காணப்படுகிறது.

கங்கையில் தண்ணீர் அதிகமாக ஓடிக்கொண்டே இருப்பதை பார்த்த காசி மக்கள், கங்கை தற்போது உள்ள காட்சியை கண்டு கலங்கி போய் உள்ளன. தென்மேற்கு பருவ மழை தேனி மற்றும் கேரள பக்கம் தொடங்கி 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் கங்கை நதி பாயும் உத்தரப்பிரதேசம் பக்கம் பெரிதாக எட்டிப்பார்க்கவில்லை .. கங்கை ஆற்றில் குவிந்து கிடந்த குப்பைகள் எல்லாம் அப்படியே போக வழியில்லாமல் தங்கியும் தேங்கியும் கிடக்கின்றன. இந்த காட்சி பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+