உலகில் இந்த 3 பேர் மட்டுமே பாஸ்போர்ட்டே இல்லாமல் எங்கும் செல்லலாம்! யார் அவர்கள்
டெல்லி: உலகில் பாஸ்போர்ட் வரலாற்றில் ஜனாதிபதி முதல் பிரதமர் வரை அரசு பிரதிநிதிகள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல பாஸ்போர்ட் தேவை. ஆனால் குறிப்பிட்ட இந்த 3 பேர் மட்டும் பாஸ்போர்ட் இன்றி எந்த நாட்டிற்கும் செல்லலாம். அவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
பாஸ்போர்ட் எனப்படும் ஒரு அடையாள ஆவணமானது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பணி ரீதியிலும் கல்வி ரீதியிலும் குடும்பத்துடன் அங்கு வசிக்கவும் தேவைப்படுகிறது. அதாவது எங்கள் நாட்டை சேர்ந்த இந்த பிரஜை மீது எந்த குற்றவியல் வழக்குகளும் இல்லை, அவர் தேடப்படும் குற்றவாளியும் இல்லை என்பதால் அவரை இந்த நாட்டிலிருந்து எந்த நாட்டிற்கும் செல்லலாம் என அனுமதி அளிக்கிறோம் என்பதுதான் பாஸ்போர்ட்.

இந்த பாஸ்போர்ட் முறையானது 102 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர் என அரசு பிரமுகர்கள் கூட ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல பாஸ்போர்ட் அவசியம். ஆனால் உலகில் உள்ள 200 க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ள நிலையில் ஒரு 3 பேர் மட்டும் பாஸ்போர்ட் இல்லாமலேயே எந்த நாட்டிற்கும் செல்லலாம்.
அவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தால் அவர்களிடம் யாரும் பாஸ்போர்ட் கேட்பதில்லை. ஆனால் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதை இருக்கே அப்பப்பா! முன்பெல்லாம் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு செல்லும் குடிமகன்களுக்கு பாஸ்போர்ட் போன்று வலுவான ஆதாரங்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
ஆனால் முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்த போதுதான் இந்த பாஸ்போர்ட் நடைமுறையை உருவாக்குவது மிகவும் முக்கியம் என்பதை ஒவ்வொரு நாடும் புரிந்து கொண்டன. 1924 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா தனது முதல் புதிய பாஸ்போர்ட் முறையை கொண்டு வந்தது. அந்த பாஸ்போர்ட்டில் அவரது பெயர், முகவரி, வயது, புகைப்படம், குடியுரிமை, கையெழுத்து ஆகியன உள்ளன.
எல்லாம் சரி உலகில் எங்கு செல்ல வேண்டுமானாலும் பாஸ்போர்ட்டே தேவையில்லாத அந்த 3 பேர் யார் தெரியுமா? பிரிட்டன் மன்னர், ஜப்பான் ராஜா, ராணி ஆகிய 3 பேர்தான் அவர்கள். சார்லஸ் பிரிட்டன் மன்னராக ஆவதற்கு முன்பு மறைந்த ராணி எலிசபெத்திடம் இந்த சலுகை இருந்தது. அவரது மறைவுக்கு பிறகு சார்லஸ் மன்னரானதால் அவருக்கு அந்த சலுகை கிடைத்துள்ளது. இது போல் மன்னர்கள் மாறும் போது அந்த நாட்டின் வெளிநாட்டு அமைச்சகம் அனைத்து நாடுகளுக்கும் இந்த விவகாரத்தை தெரிவிக்கும்.
அதே வேளையில் பிரிட்டன் மன்னரின் மனைவிக்கு பாஸ்போர்ட் கட்டாயம் தேவை. அரசு குடும்பத்தினருக்கும் முக்கியஸ்தர்களுக்கும் இருக்கும் பாஸ்போர்ட்களுக்கு சிறப்பு மரியாதை வழங்கப்படும். அது போல் ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப்பிற்கு பாஸ்போர்ட் கட்டாயம் தேவைப்பட்டிருந்தது.
ஜப்பானின் அரசாக உள்ளவர் நருஹிட்டோ, அவருடைய மனைவி மசாகோ ஓவாடா. தந்தை அகிஹிட்டோ அரசர் பதவியை துறந்த பிறகு நருஹிட்டோ அந்த பதவியை ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு வரை பேரரசராத இருந்த அகிஹிட்டோ இனி எங்கு செல்ல வேண்டுமானலும் பாஸ்போர்ட் தேவை.
இந்த 3 பேரை தவிர உலகின் அனைத்து நாட்டு பிரதமர்கள், அதிபர்கள், குடியரசுத் தலைவர்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்லும் போது அவர்கள் பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும். அவை தூதரக பாஸ்போர்ட்களாக இருக்கும். இந்த தலைவர்களுக்கு பயணம் செல்லும் நாடு முழு சலுகைகளையும் வழங்கும். அது போல் இவர்களுக்கு பாதுகாப்பு , சோதனைகள் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளிலிருந்தும் விலக்கு கொடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications