ரயிலின் கடைசி பெட்டியில் “எக்ஸ்” குறியீடு.. எதற்காகன்னு தெரியுமா? ரயில்வே கொடுத்த விளக்கம்

ரயிலின் கடைசி பெட்டியில் மஞ்சள் நிறத்தில் 'எக்ஸ்' குறியீடு ஏன் போடப்பட்டுள்ளது என்பது குறித்து ரயில்வே அமைச்சகம் தனது ட்விட் பதிவில் விளக்கம் அளித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தொலைதூர எக்ஸ்பிரஸ் ரயில்களில் சுமார் 24 பெட்டிகள் வரை இணைக்கப்படுகின்றன. இதில் எந்த பெட்டியிலும் இல்லாமல் கடைசி பெட்டியில் மட்டும் எக்ஸ் என்ற எழுத்து இடம் பெற்றிருகும். இதை பலரும் பார்த்து இருப்போம். ஆனால் இது எதற்காக என்று தெரியுமா? இது எதற்கு என்று ரயில்வே அமைச்சகம் தனது ட்விட் பதிவில் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் தொலைதூர பயணங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் மக்கள் அதிகம் விரும்புவது ரயில் பயணமாகத்தான் இருக்கும்.

கட்டணம் குறைவு, பாதுகாப்பான பயணம் என்பதால் ஏழை எளிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை பலரும் ரயில் பயணத்தைத்தான் விரும்புகின்றனர். இந்தியா முழுவதும் நடுத்தர மக்களின் பயண தேவையை பெரிதும் பூர்த்தி செய்வது ரயில்தான் என்பது மிகையல்ல.

ரயிலில் கடைசி பெட்டியில் ‘எக்ஸ்’ குறியீடு

ரயிலில் கடைசி பெட்டியில் ‘எக்ஸ்’ குறியீடு

அதேபோல், என்னதான் கார், விமானம் என்று சொன்னாலும் ரயில் பயணத்தில் செல்வதே தனி சுகம் தான் என்றும் பலரும் சொல்வதை கேட்டு இருப்போம். சரி விஷயத்திற்கு வருவோம். ரயிலில் கடைசி பெட்டியில் ‘எக்ஸ்' என்ற பெரிய எழுத்து இருப்பதை பலரும் பார்த்து இருப்போம். தொலைதூர எக்ஸ்பிரஸ் ரயில்களில் சுமார் 24 பெட்டிகள் வரை இணைக்கப்படுகின்றன. இதில் எந்த பெட்டியிலும் இல்லாமல் கடைசி பெட்டியில் மட்டும் எக்ஸ் என்ற எழுத்தும் இடம் பெற்றிருகும். இதை பலரும் பார்த்து இருப்போம்.

ஏன் எழுதப்பட்டு இருக்கிறது

ஏன் எழுதப்பட்டு இருக்கிறது

அப்படி பார்க்கவில்லை என்றால் இனி ரயில்கள் செல்லும் போது கவனியுங்கள் கண்டிப்பாக ரயிலின் கடைசி பெட்டி எக்ஸ் என்ற எழுத்து இல்லாமல் இருக்காது. பயணிகள் பலருக்கும் இந்த எக்ஸ் என்ற எழுத்து ஏன் எழுதப்பட்டு இருக்கிறது என்ற சந்தேகம் இருக்கிறது. மஞ்சள் நிறத்தில் எழுதப்பட்டு இருக்கும் எக்ஸ் குறியீடு குறித்த விவரங்கள் சமூக வலைத்தளங்களில் பலரும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இருந்தாலும் ரயில்வே தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் குறிப்பிடாததால் எது உண்மை என்ற குழப்பமும் பயணிகள் மத்தியில் நீங்கியபாடில்லை.

 ரயில்வே அமைச்சகம் விளக்கம்

ரயில்வே அமைச்சகம் விளக்கம்

இந்த நிலையில், ரயிலின் கடைசி பெட்டியில் மஞ்சள் நிறத்தில் 'எக்ஸ்' குறியீடு ஏன் போடப்பட்டுள்ளது என்பது குறித்து ரயில்வே அமைச்சகம் தனது ட்விட் பதிவில் விளக்கம் அளித்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் இது தொடர்பாக வெளியிட்டு இருக்கும் பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது: - ரயிலின் கடைசி பெட்டியில் எக்ஸ் குறியீடு என்பது ரயிலில் எந்த பெட்டியும் விடுபடவில்லை. அனைத்து பெட்டிகளுடன் கடந்து செல்கிறது என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? என்று பதிவிடப்பட்டுள்ளது.

எந்த ஒரு பெட்டியும் விடுபடவில்லை

எந்த ஒரு பெட்டியும் விடுபடவில்லை

அதாவது ரயில் நிலையங்களில் ரயில் கடந்து செல்லும் போது கடைசி பெட்டியில் இருக்கும் இந்த குறியீடு மூலமாக ரயிலின் அனைத்து பெட்டிகளும் உள்ளன. எந்த ஒரு பெட்டியும் கழன்று விடுபடவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்ய முடியும் என்பதை குறிக்கும் வகையில்தான் இந்த ‘எக்ஸ்' குறியீடு இடம் பெற்றுள்ளது.

நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன்கள் கருத்து

ரயில்வே அமைச்சகத்தின் இந்த ட்விட் பதிவு நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். ஒரு நெட்டிசன் கூறும் போது, ரயிலில் இந்த குறியீடு அழகுக்காக என்று நினைத்திருந்தேன் என்று கூறியுள்ளார். அதேபோல், மற்றொரு நெட்டிசன் கூறுகையில், இந்த தகவலை வழங்கிய ரயில்வேவிற்கு நன்றி என ஒரு நெட்டிசன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+