மழையில் நனையவில்லை.. வியர்வையால் நனைத்த மருத்துவர்.. சமூகவலைதளங்களில் வைரலாகும் ஒற்றை போட்டோ!
டெல்லி: கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என மருத்துவர் ஒருவர் மழையில் நனைந்தபடி கவச உடைகளால் ஏற்பட்ட வியர்வையில் நனைந்த சர்ட்டுடன் அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பரவல் இந்தியாவில் 4 லட்சத்தை கடந்துள்ளது. முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை மிகவும் உக்கிரமாக இருக்கிறது.
நோயாளிகளுக்கு வாசனையின்மை, சுவையின்மை, உடல் வலி, உடல் அசதி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் மிகவும் சோதனையை ஏற்படுத்தி வருகிறது. அது போல் மருத்துவர்களுக்கும் அவர்கள் அணிந்து கொள்ளும் ஆடைகளால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

ஆடைகள்
பாதுகாப்பு கவச உடையை சில மணி நேரம் அணிந்த மருத்துவர் ஒருவர் அந்த ஆடைகளை நீக்கிவிட்டு ரெகுலர் பேன்ட் சர்ட்டுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் மழையில் நனைந்தது போல் வியர்வையில் நனைந்துள்ளார் அந்த மருத்துவர்.

கொரோனா
கொரோனாவுக்கு இது ஒன்றுதான் தீர்வு என கூறியுள்ள இந்த மருத்துவர் கவச உடையுடனும் வியர்வையுடனும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்து அவர் ட்விட்டரில் கூறுகையில் அனைத்து மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் சார்பில் நான் பேசுகிறேன்.

கொரோனா நோயாளி
எங்கள் குடும்பத்தை விட்டுவிட்டு கொரோனா நோயாளிகளுக்காக இரவு பகலாக கடினமாக உழைக்கிறோம். சில நேரங்களில் கொரோனா உறுதியான நோயாளிகளுடன் காலடி தூரமே தள்ளி நின்று சிகிச்சை அளிக்கிறோம்.

மோசம்
அது போல் சில நேரங்களில் மிகவும் மோசமான உடல்நிலையுடன் உள்ள வயதானவர்களுடன் ஒரு அங்குலம் மட்டுமே தள்ளி நின்று சிகிச்சை கொடுக்கிறோம். உங்கள் அனைவரையும் நாங்கள் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்வது ஒன்றுதான், அனைவரும் போய் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். இது ஒன்றுதான் தீர்வு. பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications