இறந்த உடலில் ரத்த ஓட்டத்தை உருவாக்கிய டாக்டர்கள்.. நார்மதர்மிக் ரீஜினல் பெர்பியூஷன் என்றால் என்ன?
டெல்லி: உடல் உறுப்பு தானத்திற்காக டெல்லி டாக்டர்கள் அற்புதமான சாதனையை படைத்துள்ளார்கள். பொதுவாக சிகிச்சையில் இருப்பவர் மூளைச்சாவு அடைந்து, இதய துடிப்பு இருக்கும்போதுதான் உறுப்பு தானத்திற்காக உள்ளுறுப்புகள் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்படும். ஆனால் உறுப்பு தானத்திற்காக, இறந்த பெண்ணின் உடலில் ரத்த ஓட்டத்தை உண்டாக்கி டாக்டர்கள் சாதனை படைத்து உள்ளனர். நார்மதர்மிக் ரீஜினல் பெர்பியூஷன் எனப்படும் அரிய மற்றும் கடினமான மருத்துவ முறையை பயன்படுத்தி இதனை செய்திருக்கிறார்கள்.
உறுப்புகள் செயல் இழந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் உடல் உறுப்பு தானத்திற்காக டெல்லி மருத்துவமனை டாக்டர்கள் மிகவும் அரிய மற்றும் அற்புதமான சாதனை செய்துள்ளார்கள். டெல்லியில் வசித்து வந்த 55 வயதாகும் பெண் கீதா சாவ்லி , மோட்டார் நியூரான் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கை, கால்கள் செயலிழந்த நிலையில், அவரை துவாரகா பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடினமான மருத்துவ முறை
அங்கு மறுநாள் இரவு கீதா சாவ்லி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தான் இறந்த பிறகு உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என கீதா சாவ்லி கூறியிருந்தார். ஆனால் உடல் உறுப்புகளை தானம் செய்யும் முறையை பொறுத்தவரை சிகிச்சையில் இருப்பவர் மூளைச்சாவு அடைந்து, இதய துடிப்பு இருக்கும்போதுதான் உறுப்பு தானத்திற்காக உள்ளுறுப்புகள் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்படும். ஆனால் கீதா சாவ்லியின் இதய துடிப்பு நின்று, ரத்த ஓட்டம் எல்லாம் நின்று இறந்தவர் ஆவார். அவரது உடல் உறுப்பு தான விருப்பத்தை நிறைவேற்றுவது மிகவும் கடினம் ஆகும். இதற்காக, நார்மதர்மிக் ரீஜினல் பெர்பியூஷன் (என்.ஆர்.பி.) எனப்படும் அரிய மற்றும் கடினமான மருத்துவ முறையை பயன்படுத்தி வயிற்றுப்பகுதியில் உள்ள உறுப்புகளை மட்டும் அகற்ற முடிவு செய்தார்கள்.
கீதா சாவ்லாவால் வாழ்ந்த ஐந்து பேர்
அதன்படி எக்மோ கருவியை பயன்படுத்தி, கீதா சாவ்லியின் வயிற்று உறுப்புகளில் ரத்த ஓட்டத்தை வெற்றிகரமாக மீண்டும் தொடங்க செய்தனர். இதன் மூலம் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை உயிர்ப்பு தன்மையுடன் வைத்து அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றி எடுத்துவிட்டார்கள்.
கீதா சாவ்லியின் கல்லீரல் 48 வயது ஆணுக்கும், இரண்டு சிறுநீரகங்கள் முறையே 63 மற்றும் 58 வயதான இரண்டு முதியவர்களுக்கும் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் அவர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். இதுதவிர கீதா சாவ்லியின் கண் மற்றும் தோலும் தானமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இறந்த உடலில் ரத்த ஓட்டத்தை உண்டாக்கி உறுப்பு தானம் பெற்றது ஆசியாவிலேயே இதுதான் முதன்முறை என டெல்லியில் உள்ள தனியார் தலைவர் டாக்டர் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் கூறியிருக்கிறார்.
நார்மதர்மிக் ரீஜினல் பெர்பியூஷன் எப்படி
ஏன் இறந்த பின்னர் உடல்களில் இருந்து உறுப்புகளை எடுப்பது எளிதானது இல்லை.. இறந்த பெண்ணின் உடலில் ரத்த ஓட்டத்தை டாக்டர்கள் உருவாக்கியது எப்படி.. அதற்கு நார்மதர்மிக் ரீஜினல் பெர்பியூஷன் (NRP) முறை எப்படி பயன்படுகிறது என்பதை பார்ப்போம். பொதுவாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒரு மிகவும் மேம்பட்ட தொழில் நுட்பம் தான் Normothermic Regional Perfusion ஆகும். அதாவது நார்மதர்மிக் ரீஜினல் பெர்பியூஷன்.
உறுப்புகள் மீண்டும் செயல்படும்
இந்தச் சிகிச்சையின் போது, மூளைக்கு இரத்த ஓட்டம் செல்லாமல் இருக்க, கழுத்தில் உள்ள இரத்த நாளங்கள் தடுப்புக் கருவிகள் மூலம் அடைக்கப்பார்கள். இதனால், உறுப்புகளுக்கு மட்டுமே செயல்பாடு உறுதி செய்யப்படும்.இதன் மூலம் உறுப்புகளை உயிர் வாழும் நிலையில் பராமரித்து, அவற்றின் செயல்பாட்டை மீட்டெடுப்பார்கள்.. இதன் மூலம் ஒருவர் இறந்த பின்னரும் ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை உறுப்பு மாற்றுத்தானத்திற்கு எடுக்க முடியும். அவற்றை செயல்பட வைத்து, வேறு ஒருவரின் உடலில் பொறுத்த முடியும். இந்த சிகிச்சை மிகவும் கடினமான அபூர்வமான சிகிச்சையாகும். ஆசியாவிலேயே இந்த நார்மதர்மிக் ரீஜினல் பெர்பியூஷன் முறையை செய்திருப்பதாக டெல்லி மருத்துவமனை கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications