"சாதாரண காய்ச்சல் போலவே அறிகுறிகள் இருக்கு, ஆனா .." பரவும் புதிய வகை கொரோனா! மருத்துவர்கள் வார்னிங்
டெல்லி: நாடு முழுக்க இப்போது கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த முறை NB.1.8.1 வகை காரணமாகப் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த வகை கொரோனா வழக்கமான காய்ச்சலைப் போன்ற அறிகுறிகளை மட்டுமே ஏற்படுத்துவதால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சிங்கப்பூர், ஹாங்காங்கில் அதிகரித்த கொரோனா பாதிப்பு இப்போது இந்தியாவிலும் அதிகரித்துவிட்டது. பல்வேறு மாநிலங்களிலும் வைரஸ் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கூட தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

புதிய வகை கொரோனா
நமது நாட்டில் இப்போது ஓமிக்ரான் JN.1 திரிபின் துணை தொற்றான NB.1.8.1 மற்றும் LF.7 காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த இரு தொற்றுகளுமே வேகமாகப் பரவும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரித்துள்ளது. அதேநேரம் அவை பெரும்பாலும் லேசான நோயையே ஏற்படுத்துகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மாநிலங்களில் வைரஸ் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் வேறு இணை நோய்கள் இருந்ததாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
காய்ச்சல் போன்ற அறிகுறிகள்
NB.1.8.1 கொரோனா வேகமாகப் பரவும் நிலையில், அவை இப்போது அமெரிக்காவிலும் கண்டறியப்பட்டுள்ளன. வழக்கமான காய்ச்சலைப் போன்ற அறிகுறிகளே இதற்கும் உள்ளன. காய்ச்சல், தொண்டை வலி, சோர்வு, உடல் வலி, மூக்கு ஒழுகுதல், தலைவலி மற்றும் பசியின்மை ஆகியவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன. முந்தைய கொரோனா அலைகளில் ஏற்பட்டது போலச் சுவை மற்றும் வாசனை இழப்பு எதுவும் ஏற்படவில்லை. பெரும்பாலான நோயாளிகளுக்கு லேசானது முதல் அதிக காய்ச்சல், தொண்டை வலி, மூக்கடைப்பு, சளி மற்றும் சோர்வு மட்டுமே ஏற்படுவதாகக் கூறுகிறார்கள்.
மருத்துவர்கள் சொல்வது என்ன
இப்போது கொரோனாவுடன் பருவகால காய்ச்சலும் அதிகரித்து வரும் சூழலில், அது நிலைமையை மேலும் சிக்கலானதாக மாற்றியுள்ளது. எது கொரோனா, எது சாதாரண காய்ச்சல் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், "யாருக்காவது இருமல், சளி அல்லது காய்ச்சலை இருந்தால் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். நிமோனியா பாதிப்பு இருந்தால் அவர்களுக்கும் நிச்சயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.
பிசிஆர் மூலம் ஆன்டிஜென் சோதனைகள் ஈஸியாக செய்யலாம் என்ற போதிலும் அவை மிகவும் துல்லியமானதாக இருக்காது. பிசிஆர் பரிசோதனைகளில் நெகடிவ் என வரும் சிலருக்கும் கூட கொரோனா இருக்கலாம். அது அரிது என்றாலும் இதற்கும் வாய்ப்பு இருப்பதை நாம் உணர வேண்டும். எனவே, உங்களுக்குச் சளி, காய்ச்சல் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.
தயக்கம் இருக்கு
திடீரென அதிகரிக்கும் கொரோனாவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளன. ஆனால் பெரும்பாலான நோயாளிகள் ஒரு வாரத்திற்குள் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள். அதேநேரம் இன்னுமே கூட கணிசமான அளவு மக்களுக்கு பிசிஆர் சோதனை செய்வதில் தயக்கம் இருப்பதைப் பார்க்கவே முடிகிறது.
யார் பரிசோதனை செய்யணும்
இப்போது கொரோனா லேசான பாதிப்பையே பெரும்பாலும் ஏற்படுத்துகிறது என்ற போதிலும் அதன் ஆபத்தை முழுமையாக நிராகரிக்க முடியாது. எனவே, காய்ச்சல் இருமல் அல்லது தொண்டை வலி இருந்தால் ஒருவர் தாராளமாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம். குறிப்பாக நீங்கள் வயதானவராக இருந்தால்... உங்களுக்கு ஏற்கனவே இணை நோய்கள் இருந்தால் அல்லது அடிக்கடி வெளியே செல்லும் நபராக நீங்கள் இருந்தால் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
தற்போதைய மாறுபாடுகள் பரவலான கடுமையான நோயை ஏற்படுத்தவில்லை என்றாலும், அவற்றின் அதிக பரவும் தன்மை ஆரம்பக்கால கண்டறிதல் மற்றும் தனிமைப்படுத்தல் மேலும் பரவுவதைத் தடுப்பதில் மிக முக்கியமானதாக ஆக்குகிறது.
-
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
இந்தியர்கள் 3 நாடுகளுக்கு செல்ல அதிரடி தடை.. அறிவித்த மத்திய அரசு.. பின்னணியில் ‘எபோலா' நோய்த்தொற்று -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
சீனாவில் இருந்தபடி ஹைதராபாத்தில் ஆபரேஷன்! 3,000 கிமீ தொலைவில் ரோபோவை கண்ட்ரோல் செய்த இந்திய டாக்டர் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு பின்னணியில் பாகிஸ்தான்? முடக்கப்பட்ட பக்கங்கள்.. அடுத்து திடீர் விளக்கம் -
பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும்.. இதை தவிர்க்கவே முடியாது.. BPCL முன்னாள் இயக்குனர் எச்சரிக்கை -
92% மார்க் எடுத்த பிறகும் நேர்ந்த சோகம்! நீட் ரத்தால் கர்நாடக மாணவி விபரீதம்.. கண்ணீரில் பெற்றோர் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை












Click it and Unblock the Notifications