குஜராத் படுகொலை ஆவணப்படம்-என்.ஜி.ஓ. வழக்கில் பிபிசி-க்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன்!
டெலலி: குஜராத் படுகொலை தொடர்பான ஆவணப்பட வழக்கில் பிபிசி நிறுவனத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
2002-ம் ஆண்டு குஜராத்தில் மத வன்முறைகள் மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது அம்மாநில முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி.

2002-ம் ஆண்டு குஜராத் வன்முறைகளின் போது முஸ்லிம்கள் தேடித் தேடி படுகொலை செய்யப்பட்டனர். பதுங்கியவர்கள் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்டனர்; தீக்கிரையாக்கப்பட்டனர். பில்கிஸ் பானு போன்ற கர்ப்பிணிகள் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. அனைத்து வழக்குகளிலும் பிரதமர் மோடி மீது எந்தவித குற்றமும் இல்லை என விடுவிக்கப்பட்டார்.
இந்த 2002-ம் ஆண்டு இனப்படுகொலை தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் 2 ஆவணப்படங்களை அண்மையில் வெளியிட்டது. இந்த ஆவணப்படங்கள், பிரதமர் மோடியை குற்றம்சாட்டுவதாக இருந்ததால் மிகப் பெரும் சர்ச்சையானது. பிபிசி ஆவணப்படத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துக் கொண்டு மாநிலங்களில் வெளியிட்டனர். ஆனால் சமூக வலைதளங்களில் பிபிசி ஆவணப்படத்தை மத்திய அரசு தடுத்தது. இது மிகப் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது.

இதனிடையே பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் விளைவித்து அவதூறு பரப்பிவிட்டதாக பிபிசி நிறுவனம் மீது குஜராத் என்.ஜி.ஓ. ஒன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், பிபிசி நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பி இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications