"ஹேக்கிங்.." தடயவியல் நிறுவனம் வெளியிட்ட தகவல்.. ஸ்டேன் சுவாமி மரணத்திற்கு மறுநாள் திடீர் திருப்பம்
டெல்லி: பழங்குடியினர் உரிமை செயல்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி சிறையில் மரணமடைந்து ஒரு நாள் கழித்து, அமெரிக்க தடயவியல் நிறுவனத்திடமிருந்து கசிந்துள்ள ஒரு தகவல் பெரும் பரபரப்புக்கு காரணமாகியுள்ளது.
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருந்ததாக ஸ்டேன் சுவாமி போலவே கைது செய்யப்பட்ட சுரேந்திர காட்லிங்க் கணினி ஹேக் செய்யப்பட்டதும், அதன் மூலம்தான் அவர்கள் சிக்க வைக்கப்பட்டிருக்கலாம் என்பதும்தான் அந்த தகவல்.
தீவிரவாத சதிச் செயல்களில் ஈடுபட்டதற்கு அவரது கம்ப்யூட்டரில் ஆதாரம் இருப்பதாகத்தான் சுரேந்திரா கைது செய்யப்பட்டார். ஆனால்,
அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுரேந்திர காட்லிங்கின் கணினி ஹேக் செய்யப்பட்டது என்றும் அமெரிக்க நிறுவனம் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கம்ப்யூட்டர் ஆவணங்கள்
பீமா-கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 84 வயதான ஸ்டேன் சுவாமி மற்றும் சுரேந்திர காட்லிங் ஆகியோரும் அடங்குவர். அவர்கள் அனைவருக்கு எதிரான குற்றச்சாட்டிலும் முக்கிய ஆதாரமாக விளங்குவது அவர்களின் கம்ப்யூட்டரில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள்தான். ஆனால் அந்த கம்ப்யூட்டர் ஏற்கனவே ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நிறுவனம் கூறுவதை பார்த்தால், இவர்களின் கம்ப்யூட்டர்களில் யாரோ தவறான ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய வைத்து சிக்க வைத்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

16 பேர் மீது வழக்கு
பிரதமரை படுகொலை செய்ய சதி செய்ததாகவும் அதற்கான ஆதாரங்கள் கம்ப்யூட்டரில் இருந்ததாகவும் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்திருந்தது. எனவேதான், கடுமையான சட்டங்களின்கீழ் அவர்கள் 16 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

அமெரிக்க நிறுவனம் கம்ப்யூட்டரில் ஆய்வு
பாஸ்டனில் உள்ள ஆர்சனல் கன்சல்டிங் இந்த கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், வாஷிங்டன் போஸ்ட் இதே நிறுவனத்தில் இருந்து இதேபோன்ற மற்றொரு ஆவணத்தை செய்தியாக வெளியிட்டிருந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ரோனா வில்சனுக்கு சொந்தமான கணினியில் ஒரு ஹேக்கர் 30 க்கும் மேற்பட்ட ஆவணங்களை இன்ஸ்ட்டால் செய்ததை, ஆர்சனல் நிறுவனம் கண்டுபிடித்ததாக, வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் கூறியிருந்தது.

இ-மெயில் லிங்க் மூலம் நடந்த ஹேக்கிங்
சுரேந்திர காட்லிங்கின் கணினியின் ஹாப்ட் டிஸ்க் அவர் கைது செய்யப்பட்டபோது போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் நகல் அவரது வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள், அந்த காப்பியை அர்செனல் நிறுவனத்திடம் பகுப்பாய்வுக்காக பகிர்ந்து கொண்டனர். அர்செனல் அறிக்கைப்படி, ஹேக்கிங் தாக்குதல் நடத்தியவர் கேட்லிங்கின் கணினியை மின்னஞ்சல் வழியாக ஹேக் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு பிப்ரவரி 29ம் தேதி, ஹேக்கர் அனுப்பிய லிங்க்கை, கேட்லிங் கிளிக் செய்துள்ளார். எனவே, அது கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் ஆகியுள்ளது.

பலர் கம்ப்யூட்டர்கள்
கேட்லிங்கின் கணினியை மட்டுமல்லாமல், பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பலரின் மின்னஞ்சல் கணக்குகளையும் ஹேக்கிங் செய்துள்ளதாக அர்செனல் நிறுவனம் கூறியுள்ளது. அர்செனல் நிறுவனம் கண்டறிந்த இந்த தகவல்களை, என்டிடிவி இன்று வெளியிட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications