Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1 சொல்.. "பிளேட்டை" திருப்பிய எடப்பாடி பழனிசாமி.. அதுவும் டெல்லியில்.. அப்ப எல்லாமே பொய்யா கோப்பால்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எங்களுக்கு எந்த தகராறும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது நிருபர்களையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
அதிமுகவுடன் சில நாட்களுக்கு முன்பு, கூட்டணியை உறுதி செய்திருந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. இதனால், கூட்டணி தொடர்பாக நிலவி வந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகவே இது பார்க்கப்பட்டது.

கூட்டணி உறுதி: போதாக்குறைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகனும், உடனடியாக ஒரு பேட்டியை தந்து பாஜக - அதிமுக கூட்டணியை உறுதிசெய்திருந்தார்.. ஆனால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மட்டும் இதில் மாறுபட்டே வருகிறார்.. அவரது தேர்தல் கணக்குகளும், வியூகங்களும் அதிமுகவுக்கு எதிரான மனநிலைமையை வெளிப்படுத்தினாலும், பாஜகவின் வளர்ச்சியை முன்னிறுத்துவதாகவே அமைந்து வருகிறது.

Does the BJP AIADMK alliance continue and Did Edappadi Palaniswami speak in favor of Annamalai

அலைக்கழிப்புகள்: காரணம், கடந்த 2019 தேர்தலில் 5 சீட்டுக்களையும், 2021தேர்தலில் 7 சீட்களையும் பெற்ற நிலையில், இந்த முறையில் டபுள் டிஜிட் சீட்டுக்களை பெற்றுவிட வேண்டும் என்பதிலும் முனைப்பாக இருந்து வருகிறார்.. ஒருவேளை சீட் விவகாரத்தில் வழக்கம்போல் அலைக்கழித்தாலோ, அல்லது ஒற்றை இலக்கத்தில் சீட்டுகளை ஒதுக்கினாலோ, தனி அணியாக நின்று களமாட வேண்டும் என்பதே அண்ணாமலையின் நிலைப்பாடாக உள்ளதாக தெரிகிறது.. ஒன்று தனித்து போட்டியிட வேண்டும் அல்லது ஒருங்கிணைந்த அதிமுக என்பது தவிர்க்க முடியாதது என்பதில் உறுதியாகவும் இருக்கிறார்.

அண்ணாமலை தன்னுடைய வியூகம் குறித்து அமித்ஷாவிடம் நேரடியாகவே விளக்கியிருந்த நிலையில், அந்த வியூகம் தவிர்க்கப்பட முடியாததாகவே கருதப்படுகிறது.. விபி துரைசாமி : அதாவது, அண்ணாமலை சொல்வதும் ஓரளவு சரிதானே என்பதுபோல மேலிடம் ஆமோதித்துள்ளது.. இதற்கு மூத்த தலைவர்கள் சிடி ரவி முதல் விபி துரைசாமி வரை ஆதரவுகள் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டும் வருகின்றன. எனினும், அதிமுக மேலிடம் + அண்ணாமலை இடையே போதுமான இணக்கமான சூழல் நிலவவில்லை.

திமுக கூட்டணி: அதற்கேற்றவாறு, கடந்த சில நாட்களாகவே எடப்பாடி பழனிசாமி தந்திருந்த பேட்டிகளும் அந்த யூகங்களை உறுதி செய்வதுபோலவே அமைந்தன. உதாரணத்துக்கு, திமுகவை போலவே அதிமுகவின் ஊழல் பட்டியலும் வெளியாகும் என்று அண்ணாமலை கூறியிருந்தது குறித்து, எடப்பாடியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு அவர், "ஏங்க, அவரை பற்றி பேசாதீங்க.. அவரை பற்றி ஏன் பேசுறீங்க.. பேசி பேசியே பெரிய ஆள் ஆயிடலாம்னு அவர் நினைக்கிறார். முதிர்ச்சியான அரசியல் தலைவரை பற்றி கேளுங்க. நான் பதில் சொல்றேன். அவரை பற்றி எல்லாம் கேட்காதீங்க" என்று காட்டமாக கூறியிருந்தார்.
எப்போதுமே, முதல்வர் ஸ்டாலினையும், ஓபிஎஸ்ஸையும், மாறி மாறி சீண்டி வரும் எடப்பாடி, திடீரென அண்ணாமலை பக்கம் சீறியிருந்ததை பார்த்து தமிழக மக்கள் திகைத்துதான் போனார்கள்.. ஏற்கனவே, ஜெயக்குமார், உட்பட பல்வேறு அதிமுக தலைவர்கள் பாஜகவை சாடியே வந்தனர்.. இவர்களுக்கு, நாராயணன் திருப்பதி, விபி துரைசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இதற்கு பதிலடிகளை தந்துவந்தாலும், முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலையை பகிரங்கமாக விமர்சித்திருந்தது மிகுந்த கவனத்தையும் பெற்றது.

Does the BJP AIADMK alliance continue and Did Edappadi Palaniswami speak in favor of Annamalai

பேசாதீங்க அவரை: அதுமட்டுமல்ல, தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்கும்போதெல்லாம்கூட, மேலிட தலைவர்களை முன்னிறுத்தியே பதில் சொல்லி கொண்டிருந்தாரே தவிர, எடப்பாடி பழனிசாமி அண்ணாமலை பற்றி பேச்சையே எடுக்கவில்லை.. அந்த அளவுக்கு அண்ணாமலையை கடந்து சென்று கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி இன்று தந்த பேட்டிதான் பலரையும் திகைக்க வைத்து வருகிறது. டெல்லிக்கு சென்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. பொதுச்செயலாளராகி முதல்முறையாக அமித்ஷாவை சந்திக்க போகிறார்.. நேற்றே இந்த சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நடக்கவில்லை. இன்று அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். அநேகமாக இந்த சந்திப்பில் கூட்டணி மேலும் உறுதியாகும் என்றும் தெரிகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை எடப்பாடி சந்தித்து பேசினார்.. அப்போது, "அண்ணாமலைக்கும், உங்களுக்கும் இடையேயான தகராறு குறித்து நேற்றை சந்திப்பில் பஞ்சாயத்து எதுவும் நடைபெற்றதா?" என்று கேட்டார்கள்.. அதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் இதுதான்:

தகராறு இல்லையே: "நீங்க தவறான கருத்தை சொல்றீங்க.. எங்களுக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எந்தவிதமான தகராறும் இல்லையே.. தகராறு இருந்தால் எப்படி ஈரோட்டில் வந்து அவர் பிரச்சாரம் செய்திருப்பார்? இதுபோன்ற உள்நோக்கத்துடன் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பக் கூடாது... எங்கள் கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இனியும் தொடரும்" என்று பதிலை சொல்லி அசரடித்தார் எடப்பாடி. அப்படியானால், ஈரோடு தேர்தல் அண்ணாமலையின் பிரச்சாரத்திற்கு, எடப்பாடி ஏன் செல்லவில்லை? என்ற கேள்விகளை இணையவாசிகள் கிண்டி எடுத்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்..!!

Does the BJP AIADMK alliance continue and Did Edappadi Palaniswami speak in favor of Annamalai

அண்ணாமலை பற்றி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசும்போது, "எல்லோரும் அவரவர் கட்சியை வளர்க்கத்தான் பார்ப்பார்கள். அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் சுதந்திரமாக செயல்படும் கட்சிகள். திமுகவில் உள்ளது போன்ற அடிமை கட்சிகள் இல்லை. அந்தந்த கட்சிகளுக்கு கொள்கை இருக்கிறது. கொள்கையின் அடிப்படையில் அவர்கள் செயல்பாடுவார்கள். கூட்டணி என்று வரும்போது ஒற்றுமையாக செயல்பட்டு கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வோம்" என்றார்.

ஓபிஎஸ் மாநாடு: முன்னதாக, ஓபிஎஸ் மாநாடு தொடர்பான கேள்வி எடப்பாடியிடம் கேட்கப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமி, "அவரைத்தான் கேட்க வேண்டும்" என்றார்.. பிடிஆர் ஆடியோ தொடர்பான கேள்விக்கு, "அதிர்ச்சியூட்டும் தகவல் அந்த ஆடியோவில் இருக்கிறது.. இந்த ஆடியோ தொடர்பாக ஆய்வு செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை ஆய்வு செய்து, உண்மைத் தன்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+