யூ டூ பூட்டான்? டோக்லாமில் சீனா கால் வைத்தால் அய்யோ.. வடகிழக்கு மாநிலங்கள் என்னவாகும் தெரியுமா?
டெல்லி: நேபாளம், இலங்கை, மாலத்தீவை தொடர்ந்து இந்தியாவின் அண்டை நாடான பூட்டான் இப்போது சீனாவுடன் கை கோர்த்திருக்கிறது. இந்தியாவுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் டோக்லாம் பீடபூமியின் சில பகுதிகளை சீனாவுக்கு பூட்டான் தாரைவார்க்க ஒப்புதல் தெரிவித்திருப்பது ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களுக்கு பேராபத்தாக அமையும் என்கின்றனர் பாதுகாப்பு ஆய்வாளர்கள்.
1980களின் தொடக்கத்தில் இந்தியாவை சுற்றிய அண்டை நாடுகள் அனைத்தும் இந்தியாவின் 'கட்டுப்பாட்டின்' கீழ் இருக்கும் நிலையில்தான் வெளியுறவு கொள்கை இருந்தது. நாட்டின் பிரதமராக ராஜீவ் காந்தி பொறுப்பேற்ற காலம் முதலே இந்திய வெளியுறவுக் கொள்கையை 'அதிகாரிகள்' முடிவெடுக்க தலையெடுத்தனர். அப்போது முதலே ஒவ்வொரு அண்டை நாடும் 'இந்தியாவின்' பிடியில் இருந்து விலகி சீனாவுடன் நெருங்க தொடங்கின.

நேபாளம்: நேபாளத்தின் தற்போதைய பிரதமராக இருப்பவர் மாஜி மாவோயிஸ்டுகளின் தலைவர் பிரசண்டா. இயல்பாகவே இந்திய எதிர்ப்பையும் சீனா ஆதரவையும் கொண்டவர் பிரசண்டா. இதனால் சீனா சார்பு நிலையோடு இந்தியாவை எதிர்க்க துணிவையும் பெற்றிருக்கிறார். இந்திய நிலப்பகுதிகளை தங்களுடையதாக உரிமை கோருவதில் தொடங்கி சீனாவுக்கு பட்டு கம்பளம் விரிப்பது வரை இந்தியாவுக்கு பேராபத்தாக சீனா நிற்கிறது.
இலங்கை: இலங்கையைப் பொறுத்தவரை தமிழரின் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்கவும் பொருளாதார பேரழிவை எதிர்கொண்டு நடுத்தெருவில் கையேந்தி நிற்கும் போது அரவணைக்கவும் இந்தியா தேவையானதாக இருக்கிறது. ஆனால் இலங்கையின் நிலப் பகுதிகளை கடனுக்காக சீனாவுக்கு தாரைவார்ப்பது இலங்கையின் போக்காகவும் இருந்து வருகிறது. இலங்கையின் அம்பாந்தோட்டா துறைமுகம், இந்தியாவின் எதிர்காலத்துக்கு பேராபத்து; அங்குதான் சீனா மிகப் பெரிய கடற்படை தளத்தை அமைக்கிறது என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன. இப்போது கூட சீனாவின் உளவு கப்பல் இலங்கையில் நங்கூரம் போட்டு நிற்பதற்கு அனுமதி கொடுத்திருக்கிறது ரணில் விக்கிரமசிங்கே அரசு.
மாலத்தீவு: மாலத்தீவின் புதிய அதிபராகி இருப்பவர் முகம்மது முய்சு. அப்பட்டமான சீனா ஆதரவாளர் முகம்மது முய்சு. அதிபர் தேர்தல் காலத்திலேயே "இந்தியாவே வெளியேறு" என போராட்டங்கள் மூலம் பேராதரவைப் பெற்றவர். இப்போது மாலத்தீவின் அதிபராக முடிசூடிக் கொண்ட உடனேயே, ஒரு இந்திய ராணுவ வீரர் கூட மாலத்தீவில் இருக்க முடியாது என நம்மை மிரட்டிப் பார்க்கிறார். எல்லாம் சீனா தமக்கு ஆதரவாக இருக்கிறது என்கிற மமதையும் முகம்மது முய்சு இந்த மிரட்டலை விடுத்துக் கொண்டிருக்கிறார்.
யூ டூ பூட்டான்?: இந்த வரிசையில் இப்போது பூட்டானும் இணைந்து நிற்கிறது. பூட்டானைப் பொறுத்தவரையில் இந்தியாவை சார்ந்த நாடுதான். பூட்டான் எல்லைகளை இந்திய ராணுவமும் பாதுகாக்கிறது. குறிப்பாக சீனா- இந்தியா- பூட்டானின் எல்லையான டோக்லாம் பீடபூமிதான் இந்தியாவின் பிரதான பாதுகாப்பு அரண். இந்த டோக்லாம் பீடபூமியை குறிவைத்துதான் 2017-ல் சீன ராணுவம் முன்னேறியது. அப்போது நமது இந்திய ராணுவ வீரர்கள் தீரமுடன் மோதி சீனாவின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தினர். இன்று அதே டோக்லாம் பீடபூமியில்தான் சீனா பெருமளவு ராணுவ கட்டுமானங்களை அதிகரித்திருக்கிறது.. இதை எதிர்க்காத பூட்டான், டோக்லாமில் சில பகுதிகளை சீனாவுக்கு விட்டுக் கொடுத்து சீனாவின் சில பகுதிகளை பெறப் போவதாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது.
டோக்லாமும் வடகிழக்கு மாநிலங்களும்: டோக்லாமில் சீனாவின் ஆதிக்கம் என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகும். ஏற்கனவே அருணாச்சல பிரதேசத்தை தம்முடைய நிலப்பகுதி என்கிறது சீனா. முந்தைய போரில் அஸ்ஸாம் வரை முன்னேறிய தினவில் திளைக்கிறது சீனா. டோக்லாம் பீடபூமிக்கு இன்னொரு பெயரை பாதுகாப்பு ஆய்வாளர்கள் வைத்திருக்கின்றனர்... சிக்கன் நெக் அல்லது கோழி கழுத்து என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்திய பெருநிலத்தை வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கக் கூடிய புவியியல் அமைப்பைக் கொண்டது இந்த பீடபூமி பகுதி. டோக்லாமை சீனா விழுங்கிவிட்டால் அங்கிருந்து மிக எளிதாக வடகிழக்கு மாநிலங்களை நோக்கி சீனா முன்னேறிவிட முடியும். அதாவது இந்தியாவின் கோழி கழுத்துப் பகுதியை சீனா நெறித்துவிட்டால் வடகிழக்கு மாநிலங்களை இந்தியா இழக்க நேரிடும் என்பதால்தான் இத்தகைய பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இப்போது டோக்லாமில் சீனாவுக்கு செங்கம்பளத்தை பூட்டான் விரிப்பது இந்தியாவுக்கு மிக மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது என்கின்றனர் பாதுகாப்பு ஆய்வாளர்கள்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications