Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெருங்கும் பண்டிகைக் காலம்.. கட்டுக்கடங்காமல் உயரும் விமானக் கட்டணம்! பொதுமக்கள் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தீபாவளி பண்டிகை நெருங்க நெருங்க, விமானங்களில் டிக்கெட் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மற்ற நாட்களில் இருப்பதை விட தற்போது இரண்டு, மூன்று மடங்கு விமானக் கட்டணங்கள் உயர்ந்திருப்பது அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்வோரும், அவசர காரியத்துக்காக வெளியூர் செல்பவர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

போக்குவரத்து நிறுவனங்களுக்கு 'குஷி' தான்

போக்குவரத்து நிறுவனங்களுக்கு 'குஷி' தான்

நம் நாட்டில் பண்டிகை காலங்கள் வந்துவிட்டால் யார் சந்தோஷப்படுகிறார்களோ இல்லையோ, நிச்சயம் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் படு குஷியில் ஆழ்ந்து விடுவார்கள். அது பேருந்து நிறுவனங்கள் ஆனாலும் சரி. விமான நிறுவனங்கள் ஆனாலும் சரி. ஏனென்றால் அந்த சமயத்தில்தான், அந்நிறுவனங்களால் டிக்கெட் கட்டணங்களை விருப்பப்படி உயர்த்திக் கொள்ள முடியும். கட்டணங்கள் எவ்வளவு உயர்ந்தாலும், மக்கள் வேறு வழியின்றி சொந்த ஊர் செல்ல அந்தக் கட்டணத்தை கொடுத்து தான் பயணித்து ஆக வேண்டும். ஒவ்வொரு முறை பண்டிகை காலங்கள் நெருங்கும் போதும், போக்குவரத்து நிறுவனங்கள் மக்களின் அவசரத்தை பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டுவது தொடர்கதையாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் அரசாங்கம் பல அறிவுறுத்தல்களை வழங்கிய போதிலும், அதை போக்குவரத்து நிறுவனங்கள் சட்டை செய்வது கிடையாது.

பேருந்தில் விமானக் கட்டணம்..

பேருந்தில் விமானக் கட்டணம்..

இந்நிலையில், வரும் 24-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, தீபாவளிக்கு இரண்டு வாரங்களுக்கு முந்தைய தேதி வரை, அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. இதனால் ரயில்களில் இடம் கிடைக்காத பொதுமக்கள் தற்போது பேருந்துகளையும், விமானங்களையும் மட்டுமே நம்பி இருக்கின்றனர். ஆனால், அவற்றில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. அதாவது, பேருந்துக் கட்டணங்கள் உள்ளூர் விமானக் கட்டணத்துக்கு நிகராக உயர்த்தப்பட்டுள்ளன. அப்படியென்றால், விமானங்களில் எவ்வளவு கட்டணம் இருக்கும் என கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அதிர வைக்கும் விமானக் கட்டணம்

அதிர வைக்கும் விமானக் கட்டணம்

முன்னெப்பதும் இல்லாத வகையில், நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி உள்ளூர் விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. உதாரணமாக, தமிழகத்தை பொறுத்தவரை சென்னை - கோவை இடையே வழக்கமான நாட்களில் விமானக் கட்டணம் ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படும். ஆனால், தற்போது அதே விமான டிக்கெட் ரூ.14 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. அதேபோல, மும்பை - கோவை இடையே வழக்கமாக ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படும் விமான டிக்கெட், தற்போது ரூ.10 ஆயிரத்துக்கும் மேலே விற்பனை செய்யப்படுகிறது.

பொதுமக்கள் அதிருப்தி

பொதுமக்கள் அதிருப்தி

இதேபோல, மும்பை - டெல்லி இடையேயான விமானக் கட்டணம் அதிகபட்சமாக ரூ.37 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல, தமிழகம் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து உள்ளூர் வழித்தடங்களிலும் விமானக் கட்டணங்கள் இரண்டு மூன்று மடங்கு அதிகரித்திருக்கின்றன. இந்த திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். கொரோனா காலக்கட்டத்தில் விமான நிறுவனங்கள் அடைந்த நஷ்டத்தை, இந்த தீபாவளியில் ஈடுகட்ட அவை முயற்சிப்பதாக பொதுமக்கள் குமுறலுடன் தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+