சாமானிய மக்கள் தலையில் மத்திய அரசின் பேரிடி-வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு!
டெல்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு ரூ.2 உயர்த்திய நிலையில் தற்போது வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள இந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்படுகிறது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் தற்போது ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.550-க்கு விற்பனை செய்யப்படும். இதர வகை சிலிண்டர் விலை ரூ.803ல் இருந்து ரூ.853-க்கு விற்பனை செய்யப்படும்.

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.43,000 கோடியை ஈடுகட்டும் வகையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
தற்போது சந்தையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.868.50 ஆக உயர்ந்துள்ளது.
#WATCH | Delhi | Union Minister for Petroleum and Natural Gas, Hardeep Singh Puri says, "The price per cylinder of LPG will increase by Rs 50. From 500, it will go up to 550 (for PMUY beneficiaries) and for others it will go up from Rs 803 to Rs 853. This is a step which we will… pic.twitter.com/KLdZNujIwK
— ANI (@ANI) April 7, 2025
முன்னதாக மத்திய அரசு, பெட்ரோல்- டீசல் மீதான கலால் வரியை ரூ.2 உயர்த்தியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு வீழ்ச்சி அடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்திய கையோடு தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலையையும் மத்திய அரசு அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளது சாமானிய மக்களுக்கு பேரிடியாகிவிட்டது.
சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறுக
மத்திய அரசின் சிலிண்டர் விலை உயர்வுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செல்வப் பெருந்தகை கூறுகையில், மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டு முதல், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் 410 ரூபாயில் இருந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே போய் தற்போது ரூ 820 என்ற அளவில் உயர்ந்துள்ளது. தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய தேவையான காஸ் சிலிண்டர் விலையை இன்று ரூபாய் 50 என்ற அளவில் உயர்த்தி அடித்தட்டு மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு.
மேலும், வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் துயரத்தை கண்டுகொள்வதே இல்லை. நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் சூழலில், காஸ் சிலிண்டர் விலையையும் ஒன்றிய பாஜக அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications