Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்பின் 500% வரி மிரட்டல்.. இந்தியாவின் கையில் என்ன திட்டம்? வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டி உள்ளார். மேலும் அதற்கான மசோதாவுக்கும் ஒப்புதல் வழங்கி உள்ளார். இந்த மசோதா அடுத்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. இதனால் நம் நாட்டுக்கு அமெரிக்கா 500 சதவீத வரி விதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை முக்கிய விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து நம் நாட்டை சீண்டி வருகிறார். டிரம்ப் அதிபரான பிறகு நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி 25 சதவீதமும், உக்ரைனிடம் போர் புரிந்து வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 25 சதவீத வரியையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு விதித்தார்.

donald-trump-500-percent-tariff-threat-india-prioritises-affordable-energy-for-its-1-4-billion-peo

இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் தற்போது டொனால்ட் டிரம்ப் மீண்டும் இடியை இறக்கி உள்ளார். ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வரும் நாடுகள் மீது கடுமையாக வரி விதிக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

அதன்படி இந்தியா, சீனா உள்பட ரஷ்யாவிடம் கச்சா வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதற்கான மசோதாவை தயாரித்துள்ளது. டொனால்ட் டிரம்பும் ஒப்புதல் அளித்துள்ளார். அமெரிக்கா நாடாளுமன்றத்தில் அடுத்த வாரத்தில் இந்த மசோதா நிறைவேற வாய்ப்புள்ளது

இதனால் நம் நாட்டுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. டிரம்ப் 500 சதவீத வரியை விதிக்கும் பட்சத்தில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் சரிவை சந்திக்கும். இன்னும் சொல்லப்போனால் ஏற்றுமதி மொத்தமாக முடங்கும். இந்நிலையில் தான் டெல்லியில் இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அமெரிக்கா கொண்டு வரும் 500 சதவீத வரி தொடர்பான மசோதா பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

‛‛அமெரிக்காவின் மசோதா பற்றி நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். இந்த மசோதா தொடர்பாக அமெரிக்கா மேற்கொண்டு வரும் அடுத்தக்கட்ட முன்னேற்ற நடவடிக்கைகள் பற்றி இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. உலகளாவிய சந்தை நிலவரம் மற்றும் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு தேவைகளை கொண்டு அடுத்தக்கட்டமாக முடிவுகள் எடுக்கப்படும்.

எரிசக்தி துறையை எடுத்து கொண்டால் நம் நாட்டின் நிலைப்பாடு என்பது அனைவரும் அறிந்ததே. நம் நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கு மலிவு விலையில் பெட்ரோல், டீசல் கிடைப்பதற்கான பணியை இந்தியா முன்னெடுத்து பல்வேறு வகைகளில் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+