டிரம்ப் போட்ட பிரஷர்.. சாமர்த்தியமாக கையாண்ட இந்தியா.. அமெரிக்கா உடனான டீல் இறுதியானது எப்படி?
டெல்லி: இந்தியா அமெரிக்கா வர்த்தக டீல் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. நீண்ட காலமாகவே இந்த டீல் இழுபறியில் இருந்த நிலையில், இந்த ஒப்பந்தம் இறுதியாவதற்கு முன்பு இந்தியா அமெரிக்கா வர்த்தகம் எப்படி இருந்தது.. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் ஒரு வழியாக நேற்றிரவு இறுதியானது. இது இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த வரி 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

இந்தியா அமெரிக்கா வர்த்தகம்
டிரம்பின் வரி காரணமாகச் சமீப மாதங்களில், அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் $6.86 பில்லியனில் இருந்து அக்டோபரில் $6.30 பில்லியனாகக் குறைந்தது. இதே காலகட்டத்தில், அமெரிக்காவிலிருந்து இந்தியாவின் இறக்குமதிகள் $3.60 பில்லியனில் இருந்து $4.84 பில்லியனாக உயர்ந்தன. இந்தியப் பொதுத்துறை சுத்திகரிப்பு நிறுவனங்கள் அமெரிக்கத் திரவ பெட்ரோலிய வாயு (LPG) இறக்குமதிக்கு ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, எரிசக்தி கொள்முதலை அதிகரித்தன. இது பொருளாதாரம் மற்றும் ராஜதந்திர மறுசீரமைப்பைக் குறிக்கிறது.
டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பதவி ஏற்பதற்கு முன்னரே இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு இருக்கும் வர்த்தகப் பற்றாக்குறை குறித்து கவலை தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது வெளியான வர்த்தக டேட்டா, அமெரிக்காவிலிருந்து இந்தியா தனது இறக்குமதிகளை அதிகரித்திருப்பதைக் காட்டுகின்றன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் கணிசமாகக் குறைத்துள்ளது.
குறைந்த வர்த்தக உபரி
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் பகிர்ந்த தரவுகளின்படி, அமெரிக்காவுடனான இந்தியாவின் பொருட்கள் வர்த்தக உபரி ஏப்ரல் மாதம் $3.17 பில்லியனில் இருந்து நவம்பர் மாதம் $1.73 பில்லியனாக கிட்டத்தட்டப் பாதியாகக் குறைந்துள்ளது. அதாவது இதற்கு முன்பு அமெரிக்காவிடம் இருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருட்களை விட நாம் அனுப்பும் பொருட்களின் மதிப்பு $3.17 பில்லியன் கூடுதலாக இருந்தது. அதுதான், இப்போது $1.73 பில்லியனாக குறைந்துள்ளது.
ஆகஸ்ட் 27க்குப் பிறகு 50 சதவீத அமெரிக்க வரிகள் அமலுக்கு வந்ததால், அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதி கடுமையாகச் சரிந்தது. இருப்பினும், இந்தியா அமெரிக்காவிலிருந்து இறக்குமதியைத் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்த ஏற்றுமதிச் சரிவு, ஆடைகள், காலணிகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் போன்ற துறைகளில் மிகவும் தெளிவாகத் தெரிந்தது. இருப்பினும், நவம்பர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 22 சதவீதம் அதிகரித்தது. வரி வரம்புக்குள் வராத மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி திடீரென அதிகரித்ததே இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
கூடுதல் வரி
ரஷ்யக் கச்சா எண்ணெய்யை வாங்குவதால் விதிக்கப்பட்ட 25 சதவீத கூடுதல் வரிகள் அரசியல் ரீதியாக மிகவும் பதற்றமான பிரச்சினைகளில் ஒன்றாக இருந்தன. இது வர்த்தக ஒப்பந்தத் தாமதத்திற்கும் வழிவகுத்தது. அமெரிக்காவின் வரிகள் 50 சதவீதத்தை எட்டியதால், இந்தியா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக மாறியது. அதே நேரத்தில், கடந்த மாதம் சீனாவிற்கான வரிகளை அமெரிக்கா குறைத்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு நடுவே இந்தியா தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களான லுகோயில் (Lukoil) மற்றும் ரோஸ்நெஃப்ட் (Rosneft) மீது அமெரிக்கா விதித்த தடைகள், இந்தியாவிற்கான ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியைக் குறைத்தன. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் அமெரிக்காவின் பங்கு 4.43 சதவீதத்திலிருந்து 7.48 சதவீதமாக உயர்ந்ததாக டேட்டா காட்டுகின்றன. இதற்கு மாறாக, ரஷ்யாவின் பங்கு 37.88 சதவீதத்தில் இருந்து 32.18 சதவீதமாகச் சரிந்துள்ளது.
அமெரிக்கா வர்த்தகம் அதிகரிப்பு
கடந்த ஆண்டு, இந்தியப் பொதுத்துறை சுத்திகரிப்பு நிறுவனங்கள் அமெரிக்க எல்பிஜி இறக்குமதி செய்வதற்கு ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. கச்சா எண்ணெய் இறக்குமதி கிட்டத்தட்ட 10 சதவீதத்தை நெருங்கி வரும் நிலையில், ஆண்டுக்குச் சுமார் 2.2 மில்லியன் டன்கள் எல்பிஜி இறக்குமதியும் இந்தியாவின் ஆண்டு மொத்த இறக்குமதியில் கிட்டத்தட்ட 10 சதவீதமாக உள்ளது.
எல்பிஜி பெரும்பாலும் சமையல் எரிவாயுவாகப் பயன்படுத்தப்படுகிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் குவைத் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவின் பெரும்பாலான எல்பிஜி தேவை இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்கா இந்தியாவிற்குக் கச்சா எண்ணெய் வழங்கும் ஐந்தாவது பெரிய நாடாகவும், திரவ இயற்கை எரிவாயு வழங்கும் இரண்டாவது பெரிய நாடாகவும் இருந்து வருகிறது. எல்பிஜியைப் பொறுத்தவரை, இந்தியாவின் தேவை இறக்குமதியின் மூலம் 60 சதவீதத்திற்கும் அதிகமாகப் பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்தியா அமெரிக்கா டீல்
அணுசக்தி மின் நிலைய விரிவாக்கத்திலும் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்க வேண்டும் என டிரம்ப் தரப்பு வலியுறுத்தி வந்தது. அதற்கேற்ப இந்தியா தனது அணுசக்தித் துறையை வெளிநாட்டு முதலீடுகளுக்காகத் திறந்துள்ளது. இப்படி கடந்த சில மாதங்களில் இந்தியாவின் வர்த்தகம் பல வழிகளில் மாறியது. அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பொருட்கள் குறைந்த நிலையில், அங்கிருந்து வாங்கும் பொருட்கள் அதிகரித்தது. அதைத் தொடர்ந்தே இந்த டீல் அமைந்துள்ளது.
-
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது?












Click it and Unblock the Notifications