27 பேரை கொன்ற பயங்கரவாதிகள்.. மோடிக்கு போன் போட்ட டிரம்ப்.. என்ன சொன்னார் தெரியுமா? அதிரடி
டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் சுற்றுலா தலத்தில் நேற்று பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டு 27 பேரை கொடூரமாக கொன்றனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி மொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ள நிலையில் டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளதோடு, இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் என்ற சுற்றுலா தளம் உள்ளது. இங்கு பசுமை புல்வெளியில் நடந்து செல்லலாம். குதிரை சவாரி செய்யலாம். ஜம்மு காஷ்மீரின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

நேற்றைய தினம் பஹல்காம் சுற்றுலா தலத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். குடும்பத்துடன் குதிரை சவாரி செய்து புல்வெளியில் ரிலாக்ஸ் செய்து கொண்டிருந்தனர்.
இந்த வேளையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் 4 பேர் வந்து துப்பாக்கியால் பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 27 பேர் பலியாகினர். அதாவது சுற்றுலா பயணிகளிடம் அவர்களின் பெயர்கள், மதம் உள்ளிட்டவற்றை கேட்டு துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இந்த சம்பவம் இந்தியாவை உறைய வைத்துள்ளது.
இந்த சம்பவத்தில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 12 சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்புதான் பொறுப்பு ஏற்றுள்ளது.
இந்நிலையில் தான் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஆறுதல் கூறிய டொனால்ட் டிரம்ப் இந்த இக்கட்டான சூழலில் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்பதாக தெரிவித்தார். மேலும் பயங்கரவாத தாக்குதலை கண்டித்தார். பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலுக்கு நீதி கிடைக்க உதவி செய்வதாக டிரம்ப் வாக்குறுதி கூறினார். இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ரன்தீர் ஜெய்வால் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடிக்கு அப்பாவி மக்கள் பலியானதற்கு இரங்கல் தெரிவித்தார். பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்த அவர் இந்தியாவுக்கு நீதி கிடைக்க முழு ஆதரவை தெரிவித்தார். இந்தியாவும், அமெரிக்காவும் பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டை செய்ய சேர்ந்து நிற்கிறது'' என்று கூறினார்.
முன்னதாக இந்த தாக்குதலுக்கு டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதுபற்றி அவர் தனது ட்ரூத் வலைதள பக்கத்தில், ‛‛காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான செய்தி மிகுந்த கவலையளிக்கிறது. இந்த பயங்கரவாத தாக்குதல் நேரத்தில் இந்தியாவின் பக்கம் அமெரிக்கா நிற்கிறது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் பிரார்த்திகிறோம். பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கு முழு ஆதரவு உண்டு. எங்களின் இதயங்கள் உங்களுடன் இருக்கிறது'' என்று கூறியிருந்தார்.
இதனால் விரைவில் இந்தியா, பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் நடத்த வாய்ப்புள்ளது. இதற்கு முன்பு புல்வாமா தாக்குதலில் 40க்கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதன்பிறகு பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்திய விமானப்படை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி அசத்தியது. அதன்படி இந்த முறையும் இந்தியா பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ரெசிஸ்டென்ட் ஃப்ரண்ட் அமைப்பின் முகாம்களை குறிவைத்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தலாம் என்று சொல்லப்படுகிறது.
-
"எனக்கு பிடிக்கலைனா குண்டு போடுவேன்.." அமைதி ஒப்பந்தம் வந்த பிறகும்.. விடாமல் மிரட்டும் டிரம்ப் -
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
இந்தியா மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தெற்கு ஆசியாவுக்கும் குரல் கொடுத்த மோடி! ஜி7 மாநாட்டில் மாஸ் பேச்சு! -
இந்தியாவை தாக்கினால் நாங்கள் அடிப்போம்.. மோடி பிரதமராக இருக்கும் வரை அமெரிக்கா உதவும்.. டிரம்ப் -
வாட்சை தொலைத்த மேக்ரான்! டிரம்புக்கு கிடைத்த டுகாட்டி பைக்! G7 மாநாட்டில் நடந்த சுவாரசிய சம்பவங்கள் -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications