ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி நிகழ்ச்சி லைவ்வாக ஒளிபரப்பிய தூர்தர்ஷன்
Recommended Video
டெல்லி: பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தொடக்க விழா மற்றும் விஜயதசமி நிகழ்ச்சிகள் அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் (டிடி) இன்று லைவ்வாக ஒளிபரப்பப்பட்டது.
பொதுவாக தனியார் அமைப்புகள், இயக்கங்களின் நிகழ்ச்சிகள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாவதில்லை. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் என அரசு தரப்பு நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படுவது வழக்கம்.

அண்மையில் சென்னை ஐஐடியில் பிரதமர் மோடி பங்கேற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியை சென்னை தூர்தர்ஷன் ஒளிபரப்பு செய்யவில்லை என்பது சர்ச்சையானது. இதில் தொடர்புடைய அதிகாரி மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்தது.
LIVE: RSS chief Mohan Bhagwat addresses Foundation Day of RSS https://t.co/m0a8okw5zg pic.twitter.com/b4bsrpCaE7
— Doordarshan News (@DDNewsLive) October 8, 2019
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தொடக்க நாள், விஜயதசமி நிகழ்ச்சிகள் இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அதன் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் கட்காரி, விகே சிங் ஆகியோர் பங்கேற்றனர். ஹெச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் சிறப்பு விருந்தினராக இதில் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியை தூர்தர்ஷன் லைவ்வாக ஒளிபரப்பியது. அத்துடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தோற்றம் குறித்த சிலைடுகளையும் கூடுதல் விவரங்களாக தூர்தர்ஷன் ஒளிபரப்பியது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications