சுற்றுலா வந்த லண்டன் பெண்! கையை விட்டு.. காரில் ஏறியவுடன் டிரைவரின் ச்சீ ச்சீ செயல்! அதிர்ந்த டெல்லி
டெல்லி : இங்கிலாந்தின் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகளின் முன்னிலையில் காரில் ஓட்டுநர் சுய இன்பம் செய்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18 வயது உட்பட்ட பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
வட மாநிலங்களில் குறிப்பாக உத்தரப்பிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் அதனை தடுக்க முடியவில்லை.

டெல்லியில் ஷாக்
இது ஒரு புறம் இருக்க வெளிநாடுகளில் இருந்து டெல்லி, கோவா, ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளிடமும் அத்துமீறும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன, இந்த நிலையில் தான் தலைநகரான டெல்லிக்கு சுற்றுலா வந்த லண்டன் பயணிகள் முன் காரின் ஓட்டுனர் காருக்குள்ளேயே சுய இன்பம் செய்து சிக்கி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பெண் வழக்கறிஞர்
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இருந்து பெண் வழக்கறிஞர் ஒருவர் தனது ஆண் நண்பருடன் இந்தியாவில் ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றிப் பார்ப்பதற்காக சுற்றுலாவுக்கு வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தனது நண்பருடன் வந்த அந்த பெண் வழக்கறிஞர் செல்போன் மூலம் கார் ஒன்றினை முன் பதிவு செய்திருக்கிறார்.

காரில் அநாகரீகம்
தெற்கு டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு செல்வதற்காக அவர் முன்பதிவு செய்த நிலையில் காரினை மாகன் லால் என்பவர் ஓட்டி வந்துள்ளார். விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் பெண் மற்றும் அவரது ஆண் நண்பரின் முன்னிலையில் காரை ஓட்டி வந்த லால் சுய இன்பம் செய்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு எரிச்சல் அடைந்த இருவரும் அதனை கண்டித்துள்ளனர். அப்போது அவர்களை மிரட்டிய லால் கொலை செய்து விடுவதாக கூறியுள்ளார். இதை அடுத்து அந்த பெண் வழக்கறிஞர் இது குறித்து டெல்லி போலீசாருக்கு தொலைபேசி மூலம் புகார் அளித்தார்.

ஓட்டுனர் கைது
அங்கு வந்த போலீசார் காரின் ஓட்டுனர் லாலை கைது செய்தனர். விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட லால் உத்தரபிரதேச மாநிலம் லால்கன்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் கடந்த ஆறு மாதங்களாக டெல்லி விமான நிலையத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதை அடுத்து அவர்கள் அளித்த புகாரியில் உண்மைத்தன்மை மற்றும் ஆதாரங்கள் இருப்பதையடுத்து கார் ஓட்டுநரை கைது செய்த போலீசார் சுற்றுலா பயணிகள் மீண்டும் வெளிநாடு சென்று விட்டதால் லாலை ஜாமீனில் விடுவித்துள்ளதாக கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications